பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாட்டின் இசை 57

கலே பரவி இருந்தது என்பது விளங்கும். திருவள்ளு வர் தம் நூலில் இசையைப்பற்றிய பல நுண்ணிய குறிப்புக்களை வெளியிடுகின்ருர். பழந்தமிழ் இசைக் கருவிகளாக யாழையும் குழலேயும் அவர் குறிப்பிடும் சங்கர்ப்பமும் திறமும் மறக்க முடியாத பண்புடை யனவாகும். சங்க காலத் தமிழகத்தில் தமிழிசையை வளர்த்தவர்கள் பாணர்களே ஆவார்கள். தமிழ் அரசர்களால் பெரிதும் போற்றிப் புரக்கப்பட்ட அவர்கள் கலேயுள்ளமும் கருணே உள்ளமும் ஒருங்கே பெற்றிருந்தார்கள். அவர்கள் தமிழகத்தின் பொற் காலத்தில் பெற்றிருந்த பெருஞ்சிறப்பினைப் பத்துப் பாட்டுள் வரும் பெரும்பாண் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை என்னும் நூல்கள் அழகாக விளக்குகின் றன. பண் பாடும் பாணர்கள் மண்ணுளும் வேங் தர்க்கு நிகராகப் புகழுடன் விளங்கிய பெருமை யினைப் பேசாத சங்க இலக்கியம் இல்லை. பாண ரில்லாத திருவிழா-அரசவை-பழந்தமிழ் நாட்டில் இருந்ததில்லை. பரிபாடல் என்ற இலக்கியமே இசை இலக்கியம்.

பழந்தமிழ்ப் பானர்களைப்பற்றி-அ வர் க ள் கையாண்ட இசைக் கருவிகளைப்பற்றித்- த மி ழ் இலக்கியங்கள் விரிவாகப் பேசுகின்றன. அவர்கள் ஏந்திச் செல்லும் யாழ்கள் இரு வகைப்படும். ஒன்று, பேரியாழ்; மற்றென்று, செங்கோட்டு யாழ். இந்த யாழ்களின் வருணனை பத்துப்பாட்டில் அழகாய் அமைந்துள்ளது. இவ்விசைக்கருவிகள் நாளடை வில் வளர்ச்சியுற்றன. பின்னர் மகா யாழ், சகோட யாழ் என்ற இரு புதிய யாழ்கள் தோன்றின. முத