பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 காற்றிலே மிதந்தவை

லிரண்டு யாழ்களும் சங்க காலத்தவை. செங்கோட்டு யாழான சிறிய யாழுக்குத் தந்திகள் ஏழு பேரி யாழுக்குத் தந்திகள் இருபத்தொன்று ; சகோட யாழுக்குக் கந்திகள் பதின்ைகு; மகா யாழுக்குத் தக்திகள் பதினேழு. மகா யாழும் சகோட யாழும் சிலப்பதிகார காலத்திற்குப் பிற்பட்டவையாகும். சங்க காலத்து யாழ்கள் ஆரியக் கலே தமிழ் நாட்டில் கலந்த பின் பல்வகையாலும் மாறுதலுறலாயின. ஆயிரம் தந்திகளையுடைய காரதப் பேரியாழும், ஆசறு கந்திகளேயுடைய கீசகயாழும், ஒன்பது தந்தி களேயுடைய தும்புரு யாழும், ஒரே தந்தியுடைய மருத்துவ யாழும் ஏற்படலாயின. இவற்றின் இலக் கணங்களே இடைக்கால நூலாகிய கல்லாடம் துவல் கிறது. தும்புரு யாழும் மருத்துவ யாழும் வீணே போன்றவை. அவை அழகிய வேலைப்பாடமைந் தவை என்பதும், விலையுயர்ந்த இரத்தினங்களே அக்கருவிகளினுள் இட்டிருந்தனர் என்பதும், பட் டால் செய்த அழகிய பெட்டிகளில் அவை போற்றி வைக்கப்படும் என்பதும் தமிழ் நூல்களால் விளங்கு கின்றன. சங்க கால நூல்களாகிய சிறுபாணுற் அறுப்படை, பெரும்பாணுற்றுப்படை, பொருநராற் அப்படை, மலைபடுகடாம் முதலிய நூல்களாலும், சிலப்பதிகாரம், கல்லாடம் என்னும் நூல்களாலும் பழந்தமிழ் இசைக் கருவியாகிய யாழ் பற்றிய செய்திகள் பல விளக்கம் பெறுகின்றன. பேரி யாழ் மூன்று ஸ்தாயிகளிலும், ஏழு ஸ்வரங்களே ஒலிக்கும் இருபத்தொரு தந்திகளையுடையதாகும். ஏழு ஸ்வரங்களுக்கும் குரல், துத்தம், கைக்கிளை, உழை,