பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாட்டின் இசை 59

இளி, விளரி, தாரம் என்னும் தூய தமிழ்ப் பெயர்கள் உண்டு. பழங்தமிழ்ப் பாணன் ஒவ்வொரு ஸ்வரத் தையும் ஏனேய ஸ்வரங்களோடு கூட்டிக் கூட்டி வாசிக்க ஆரம்பித்தான். ஒரு கங் தி யி ல் ஒரு ஸ்வரம் ஏற்பட்டால், அதன் மூன்றில் இாண்டு பாகம் அந்த ஸ்வரத்தின் பஞ்சமத்தையும், அரைப் பாகம் உச்சஸ்தாயியில் எட்டாவது ஸ்வரத்தையும் தோற்றுவிக்கும் என்பதைப் பாணன் நன்கு அறிக் திருந்தான்.

சிலப்பதிகாரக் காவியத்தை ஆராய்வதால் தமிழ் இசையைப்பற்றிய எத்தனையோ பேருண்மை களே எல்லாம் அறிந்து இன்புறலாம். அந்நூலும் அந்நூலுக்கு உரை கண்ட அடியார்க்கு நல்லாரின் அறிவின் திறனும் பண்டைத் தமிழிசையைப் பற்றி நமக்குப் பலவித உண்மைகளையும் அறிவிக் கின்றன. சிலப்பதிகாரத்தில் இசைக் கருவிகளின் பெயர்களும் இலக்கணங்களும், கருவிகளிலும் கண் டத்திலும் இசைகள் பிறக்கும் முறைமையும், பிறவும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. அக் காலத் தில் பேரிகை, இடக்கை, உடுக்கை, மத்தளம், தியிலே, குடமுழா, தண்ணுமை, தடாரி முதலிய முப்பத் தொரு வகைத் தோற்கருவிகள் வாசிக்கப்பட்டன வாம். சிலம்பிற்கு உரை கண்ட அடியார்க்கு நல் லார் எழுத்தால் விளக்கம் பெறும் தமிழிசைபற்றிய செய்திகள் பலவாகும். எனினும், அவர் காலத் திலேயே பழந்தமிழ் இசைபற்றிய செம்மை சான்ற நூல்கள் எவ்வாருே கால வெள்ளத்திற்கு இரை. யாகிவிட்டன என்பது தெரிகிறது.