பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

密爵 காற்றிலே மிதந்தவை

"இசைத்தமிழ் நூலாகிய பெருகாரையும், பெருங் குருகும், பிறவும், தேவ இருடி நாதன் செய்த பஞ்ச பாரதீயமும் முகலாகவுள்ள தொன்னூல்கள் இறக் தன என அடியார்க்கு நல்லார் கூறுகின்ருர்.

சிகண்டி என்னும் செந்தமிழ் முனிவர் இயற்றிய இசை துணுக்கமும், யாமளேந்திரச் செய்த இந்திர காளியமும், அறிவனுர் செய்த பஞ்சமரபும், ஆதிவாயிலார் செய்த பரத சேனபதியமும், பாண்டியன் மதிவாணனுர் செய்த மணிவாணர் நாடகத் தமிழ் நாலும் ஆகிய ஐந்து நூல்களும் அடியார்க்கு நல்லார் காலத்தே தமிழ் மக்களால் பயிலப்பெற்றன என்பதும், இவற். றிற் சொல்லப்பட்ட இசை நாடக முடிபுகளை ஒரு புடையொப்புமையாகக் கொண்டு சிலப்பதிகாரத் திற்கு அடியார்க்கு நல்லார் விரிவுரை இயற்றின. ரென்பதும் சிலப்பதிகார உரைப்பாயிரம் உரைக் கும் உண்மைகள். இந் நூ ல் களும் பிற்காலத்தே மறைந்தன. இவற்றிலிருந்து மேற்கோளாகக் காட்டப்பட்ட ஒரு சில சூத்திரங்களே இங்காளிற் கிடைக்கின்றன. சிலப்பதிகாரவுரைப்பகுதியிலும் இசைத்தமிழ்த் திறம் விளங்கும் கானல் வரியுரை நமக்குக் கிடைக்கவில்லை.

காலம் மாற மாறப் பழந்தமிழ்ப் பாணரது கிலேயும் மிக மாறியது. சங்க காலத்திற்குப்பின் தமிழ் இலக்கிய வரலாற்றில் இருள் சூழ்ந்த காலம் செறிந்திருந்தது. அதன்பின் கி. பி. 7-ஆம் நாற் முண்டில் சமயகாலம் உதயமாயிற்று. அக்காலத் திலேதான் சம்பந்தரும் அப்பரும் தோன்றினர். அவர்