பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாட்டின் இசை 6%

கள் தோற்றம் தமிழிலக்கிய உலகில்-அதை ஒட்டிய தமிழிசை உலகில்-பெரியதொரு- புதியதொரு மாற்றம் ஏற்படக் கா ர ன மா யி ற் று. நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பினர் ஞானசம்பந்தர். பத்திச்சுவை நிறைந்த அவர் பாடல்களேத் திருநீல கண்டி யாழ்ப்பாணரும் அவர் துனேவியாரும் ஸ்வரம் கோத்து யாழில் பாடி வந்தனர். இச்செய்தியைச் சேக்கிழாரின் பெரியபுராணம் சுவை ததும்பக் கூறு கிறது. மூவர் தமிழாகிய தேவாரமும், மணிவாசகர் திருவாசகமும் தமிழ் மண்ணில் பத்தி வெள்ளமும், தமிழிசை வெள்ளமும் பெருகிப் பாயச்செய்தன. தேவாரம், திருவிசைப்பா என்ற பெயர்களே அவை இசைப்பாட்டு என்பதை விளக்குகின்றன அல்லவா? தமிழ் மக்கள் கணக்கற்ற நாம் மு ன் டு க ளாய் த் தங்கள் கண் ணி னு ம் உயிரினும் இனியவாய்ப் போற்றிவந்த எண்ணற்ற தமிழ்ப்பண்கள் அத்தனே யும் புதைந்து கிடக்கும் பொற்சுரங்கமாய் கால்வர் பதிகங்களும், நாலாயிரப் பிரபந்தமும் விளங்கும் பெற்றியினே அறிந்து போற்ருத தமிழறிஞர் இன்று உண்டோ? இத்தகைய பெருமை வாய்ந்த, பத்தி கலந்த இசை வளர் ந் த நூற்ருண்டிற்குப் பின் தமிழகத்தில் தோன்றிய நூல்கள் பெருங்கதையும், சீவக சிந்தாமணியும் ஆகும். யாழிசைக்கும் முறையைப் பற்றிய விவரமான செய் தி க ளே இந் நூ ல் கள் வெளியிடுகின்றன. கலேவன் தலைவிக்கு இசை கற்பிப்பதும், இருவருக்கும் இசைப்போட்டி ஏற்படு வதும் இயல்பு என்பதை இங் நூ ல் க ள் விளக்கு கின்றன.