பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蔷艺 காற்றிலே மிதந்தவை

கி. பி. 6-ஆம் நூற்ருண்டின் இறுதியில் வீழ்ச்சி புற்றிருந்த தமிழிசை புத்துயிர் பெற்று வளரலா யிற்று என்பதைப் பார்த்தோம். இடைக்காலத்தில் தமிழன்பும், தமிழ்ப்பண்பும் இல்லாத வேற்ருரின் ஆட்சிக்கு இரையாகியிருந்த தமிழகத்தில் சூழ்ந் திருந்த காரிருள் மறைந்து கலேஒளி பரவக் காரண மாயிருந்தவர்கள். தமிழ் வேந்தர்கள் எனல் மிகை யாகாது. பாண்டியன் கடுங்கோ என்பான், இன்பத் தமிழகத்தை இருள் சூழ்ந்த நாடாக்கிய களப்பிரரை வென்முன். தமிழகத்தில் தமிழாட்சி தலே எடுத்தது. அதன் பயனுக மீண்டும் தமிழிசைதழைக்கலாயிற்று. பாண்டிய மன்னர் தம் தலைநகரில் இசைத் தமிழ்ச் சங்க மொன்றை நிறுவித் தமிழிசையைத் தனிப் பற்றுடன் வளர்த்தனர் என்பது இலக்கிய வர லாற்று ஆராய்ச்சியால் விளங்குகிறது.

உயர்திற் கூடலின் ஆய்ந்தஒண் டிந்தமிழின்

துறைவாய் நுழைந்தனே யோஅன்றி ஏழிசைச் சூழல்புக்கோ இறைவா! தடவரைத் தோட்கென்கொ லாம்புகுந் தெய்தியதே' என்னும் மாணிக்க வாசகப் பெருமான் திருவாக்கி லுைம்,

ஆழி வடிம்பலம்ப நின்ருனும் அன்ருெருகால் ஏழிசை நூற் சங்கத் திருந்தானும்

என்னும் நளவெண்பாப் பாடலாலும் இவ்வாய்மை விளங்கும். கி. பி. 11-ஆம் நூற்ருண்டில் விளங்கிய முதற்குலோத்துங்கச் சோழன் இசைத் தமிழ்நூல் ஒன்று இயற்றி இருந்தமை கலிங்கத்துப் பரணியால் அறியப்படுகின்றது. அவன் மனேவி இசைக் கலையில் இணேயில்லாப் புலமை பெற்றிருந்தாள். அதனல்,