பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ காற்றிலே மிதந்தவை

மெல்லிசை வண்ணம், நெடுஞ்சீர் வண்ணம், குறுஞ் சீர் வண்ணம் முதலியனவாகும். செய்யுட்கள் யாவும் எதுகை, மோனே முதலியவை அமைந்தே இருக்க வேண்டும் என்று யாப்பிலக்கணம் வரை யறை செய்கிறது. வெண்பா முதலிய பாக்களுள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை இசையுடனேயே பண்டுதொட்டு ஒதப்பட்டுள்ளது. அவற்றுள்ளும் கலிப்பா, பரிபாட்ல் என்பன இசைப்பாக்களே என்பது பேராசிரியர் முதலிய பேருரையாளர்கள் கருத்து. எட்டுத் தொகையுள் ஒன்ருய் விளங்கும் பரிபாடற் செய்யுட்களுள் ஒவ்வொன்றிற்கும் பண் வகுக்கப் பெற்றிருப்பது ஆராய்கற்குரியது. பாலே யாழ், கோதிரம், காந்தாரம் என்ற பண்கள் அதில் உள்ள மையும், இசை வகுத்தோராக ஒருபதின்மர் பெய ரும் அங்.நூலால் விளங்குகின்றன. தமிழிலக்கணப் படி வெண்பா முதலிய பாக்கட்கு இனமாய் உள்ள தாழிசை, துறை, விருத்தம் என்பனவும் இசைப்பாக் களே. மேலும், மாங்கர் உள்ளத்தில் தோன்றும் மெய்ப்பாடுகளே உணர்த்தும் ஓசை நயமும் கவி நய மும் ஒருங்கே அமைந்த பாடல்கள் பலவற்றைப் போற்றி வளர்த்த பெருமை தமிழ்ப் புலவர் பரம் பரைக்கு உண்டு என்பது தொல்காப்பியத்தாலும், சிந்தாமணி, கம்பராமாயணம், பெரிய புராணம் முத லிய நூல்களாலும் தெளிவாகும்.

தமிழிலக்கியத்தில் ஒப்பற்ற இசைப்பாக்களாக ந ம க் கு க் கிடைப்பன சிலப்பதிகாரத்திலுள்ள கானல்வரி, வேட்டுவவரி, ஆய்ச்சியர் குரவை, ஊர் சூழ்வரி, குன்றக்குரவை, வாழ்த்துக்காதை என்