பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாட்டின் இசை #5

லும் ஆறு காதைகளுமாம். தேவாரம், திருவாச கம், திருவிசைப்பா, திருவாய் மொழி, திருப்புகழ் முதலியனவும் அளப்பரிய இசைப்பெருஞ்செல்வக் களஞ்சியங்களேயாகும்.

" சிந்து' என்ற இசைப்பாட்டும் 18-ஆம் நூற் ருண்டிலேயே தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்தது. விஜயநகரப் பேரரசின் காலத்தே தமிழர் கண்ட பேரிசைச் செல்வம் திருப்புகழாகும். பின்னர்ப் பள்ளு,நொண்டிநாடகம், குறவஞ்சி முதலியன தோன்றின. அவற்றைத் தொடர்ந்து கீர்த்தனங்கள் எழுந்தன. முத்துத் தாண்டவராயர், மாரிமுத்தாப் பிள்ளை, அருணுசலக் கவிராயர், இராமலிங்க சுவாமிகள், கோபாலகிருஷ்ண பாரதியார் முதலியோர் தமிழ் மரபைத் தழுவித் தெள்ளுதமிழ்க் கீர்த்தனைகள் பல பாடித் தமிழ் நாட்டில் தமிழிசை வெள்ளமிடச் செய்தனர்.

பண்டுதொட்டே தமிழ் நாட்டில் நாடகத் தமிழி லும் இசைக்குச் சிறப்பிடம் இருந்த செய்தியைச் சிலப்பதிகாரம் முதலிய நூல்களாலும் அவற்றின் உரைகளாலும் தெள்ளிதின் உணரலாம். அப் பண்பாடு மிகவும் பிற்காலத்தில் முற்றி முதிர்க்க கிலேயைக் காண்கிருேம். இராமநாடகம் முதலிய வற்றைக் காணும்போது கீர்த்தனங்களே நாடக மாய் அமைந்த காட்சியைக் காண்கிருேம். ஆம். இது தமிழ் நாட்டிற்கும் தமிழ் மொழிக்கும் உரிய தனிப்பெருமை அன்ருே ?

5