பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ காற்றிலே மிதந்தவை

இசை பற்றிய பல வியத் த கு நுட்பங்களைத் தமிழ் மக்கள் அறிந்திருந்தார்கள். புன்னகவராளி யில் மகுடி இசைத்தால் பாம்பும் படமெடுத்தாடும். குறிப்பிட்ட ஒரு பண்ணுக்குத்தான் மதம் பிடித்த யானையும் அடங்கும். பாலே வனக் கள்வரும் பாலே யாழ் கேட்டுத்தான் படையைத் துறந்து பண்படு வர். மேகராகக் குறிஞ்சிதான் மேகங்களை ஈர்க்கும். இவையெல்லாம் தமிழர்க்குத் தம் வாழ்க்கை அனு பவத்தால் விளங்கிய உண்மைகள்.

கிலத்திற்கும் காலத்திற்கும் ஏற்பப் பண்டைத் தமிழர் இசை வகுத்திருந்தனர். காலேயில் மருதப் பண்ணும், நண்பகலில் பாலைப் பண்ணும், மாலையில் செவ்வழிப் பண்ணும், நள்ளிரவில் குறிஞ்சிப் பண் இணும் பாடுதற்குரியன என்பது இசைநூன்மரபு.

'சிந்து, திரிபதை, சவலை, சமபாத விருத்தம், செந்துறை, வெண்டுறை, பெருந்தேவபாணி, சிறு தேவபாணி, வண்ணம் என்னும் ஒன்பது வகையது இசைப்பாட்டு, என்பது, அறிவர்ை இயற்றிய பஞ்சமரபு வெண்பாவினல் பெறப்படும். எவ்வுயிர்க் கும் இன்பமுண்டாக்கலும், அறிவினைத் தெளிவடை யச் செய்தலும், மனத்தை ஒருமை நிலையில் நிறுத் தலும், புகழ் பட வாழச் செய்தலும், உறுதிப் பொருளே வற்புறுத்தலும், முடிந்த பயனேக் கூறு தலும், மெல்லோசையால் மன அமைதியைத் தரு தலும், உச்ச கிலேயாகிய ஒசையால் மக்களது உணர்வைத் தாண்டித் தொழிற்படச் செய்தலும் இசைப்பாடலாற்பெறும் எண்வகைப் பயனெனக் கொண்டனர் தமிழ் முன்னேர்.