பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாட்டின் இசை 57

பழந்தமிழ் நூல்களே ஆராயும்போது தமிழ் மக் கள் தமிழிசையில் தங்கள் நாட்டின்-மொழியின்பண்பாட்டின்-துளய தனித் தன்மை விளங்குமாறு போற்றி வளர்த்த வரலாறும் விளங்குகிறது. இறை யோடு தொடர்புடையனவாய் இன்று வேற்று மொழிச் சொற்களாய் வழங்கும் பல சொற்களுக்கு நேரான தமிழ்ச் சொற்கள் சங்க காலத் தமிழகத் தில் பெருவாரியாய் வழங்கிய உண்மை இலக்கிய நோக்குடையார்க்கு எளிதில் புலனுகும். ஆலாபனம் என்பது ஆளத்தி என்று அங்காளில் வழங்கிற்று. த, ந, ம என்னும் மூன்று மெய்யினங்களோடு குற் றெழுத்தைந்தும், நெட்டெழுத்தைந்தும் தென்னு, தெனு என்னும் அசைகளும் ஆளத்தி செய்வதற்குரியன வாயிருந்தன. மூலாதாரம் தொடங்கி எழுத்தின் நாதம் ஆளத்தியாய்ப் பின்பு இசை என்றும் பண் என்றும் பெயர் பெறலாயின. ஜனன ராகங்கள் 'பண் என்றும், ஜன்னிய ராகங்கள் திறம் என்றும் கூறப்பட்டன. இசைப்பாட்டுக்கள் எல்லாம் செங் துறை, வெண்டுறை, வரி, உரு முதலிய பெயர் களால் வழங்கின. வரி, உரு முதலியவற்றுள் எத் தனேயோ பல வகைகள் உண்டு. இப்பொழுது கீர்த்தனங்கள் என்று கூறப்படுவன, உருக்களில் அடங்குவனவாகும். பல வகையான கூத்துக் களோடும் வரிப்பாடல்கள் பாடப்பட்டன. கொற்றி, பிச்சி, சிந்து, சித்து, தண்டி, அம்மனே, பந்து,கழங்கு, உந்தி, தோள் வீச்சு, சாழல், தெள்ளேனம் முதலிய எண்ணிறந்த கூத்தினங்களும், அவற்றிற்குரிய பாடல்களும் நடைமுறையிலிருந்தன. அவை பெரும்