பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$8 காற்றில்ே மிதந்தவை

பாலும் மகளிருடைய விளையாட்டுக்களாய் விளங் கின. மற்றும், மகளிர் கிளி ஒட்டுவதும் பாட்டு; சுண்ணமிடிப்பதும் பாட்டு. இவ்வாறு எல்லாச் செயல்களும் பாட்டுக்களோடு திகழ்ந்தன. இங்கனம் மக்களின் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்து இடம்பெற்றிருந்த இசை மயமான இங்கிகழ்ச்சிகள், வாழ்க்கையின் விமரிசனமாய் எழுந்த இலக்கியங் களிலும் இடம் பெறலாயின. அம் மனே, பந்து, ஊசல், வள்ளே என்னும் வரி ப் பா ட் டு க் க ளே ச் சிலப்பதிகாரத்தில் காணலாகும். திருவாசகத்தில் தெள்ளேனம், சாழல், தோள் நோக்கம், உந்தி முதலிய வரிப்பாடல்களைக் காணலாம்.

இலக்கிய நோ க் குட ன் தமிழ் நாட்டின் இசையை ஆராயும் போது விளங்கும் ஒரு பெரிய உண்மை, நம் வியப்பிற்கும் போற்றுதலுக்கும் பெரிதும் உரிய தாய் உள்ளது. வேறு எந்த நாட்டைக்காட்டிலும் தமிழ் காடுதான் 'இசையால் இறைவனே உணரலாம், என்ற உண்மையை உணர்ந்திருந்த நாடு என்பதில் ஒரு சிறிதும் ஐய மில்லை. பாட்டிடைப் பண்ணுய்ை, ஏழிசையாய் இசைப்பயனுய், எம்மிறை கல்வீணே வாசிக்குமே? என்றெல்லாம் வரும் ஆன்ருேர் வாக்குக்கள் தெய் வானுபவம் கிறைந்த தி ரு மொ ழி க ள ல் ல வா? எனவே, தமிழ் நாட்டின் இசை, சாதாரண உலக வாழ்க்கைக்கு மட்டுமன்றி, கித்தியமான தெய்விக கிலேயடைவதற்கும் துணே புரியும் ஆற்றல் வாய்க் திருந்தது என்பது புலகிைறதன்முே? ஆம்.