பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 பிரபந்த வகைகள்-அந்தாதி

காலவெளியில் கன்னித் தமிழ்த்தாய் கண்ட யுகங்கள் எத்தனையோ! அகநானூறும் புறநானூ அறும் செழித்து வளர்ந்தது ஒரு காலம். சிலம்பும் மேகலையும் சிலம்பியது ஒருகாலம். சிந்தாமணி சுடர் விட்டது ஒரு காலம். சேக்கிழார் பாமணமும், கம்பர் கவிமணமும் க ம ழ் ங் த து ஒரு காலம். தேவாரப் பாலும், திருவாசகத் தேனும், நாலாயிரக் கனிச் சாறும் பாய்ந்தது ஒருகாலம். புராண வெள்ளங்கள் க ை புரண் டு ஓடியது ஒரு காலம். இப்படி எத்தனையோ காலங்களைக் கண்ட கன்னித்தமிழ், பிற்காலத்தில் பிரபந்தயுகம் ஒன்றையும் கண்டது. அங்காளில் தமிழ் இலக்கியச் சோலையில் செழித்து வளர்ந்த இலக்கியத் தருக்களே அந்தாதிகள் ஆகும். காளுக்கு நாள் தமிழ்மொழி அடைந்துவந்த புதுமை யாலும் எளிமையாலும் தொண்ணுாற்ருறுவகைப் பிரபந்தங்கள் தோன்றின. அவற்றுள் ஒருவகைப் பி ர பங் த மே அந்தாதி எனப் போற்றப்படும். அக்தாதி என்பது என்ன? முன்கின்ற செய்யுளின் இறுதி எழுத்தாவது, அ ைசயா வ து, சீராவது, அ டியாவது பின்வரும் செய்யுளில் முதலாய்வர, அங்ஙனமே நூலின் ஈறும் அதன் முதலாய் நிற்கு மாறு முடியப்பாடும் ஒருவகை நூலே அந்தாதியாகும். எனவே, இவ்விலக்கியம் சொற்ருெடர்க் கோவை யினயே முதல் நோக்கமாகக் கொண்டது என்பது