பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 காற்றிலே மிதந்தவை

சாமிநாதய்யர் எழுதியுள்ள வாசகம் சென்ற சில நூற்றுண்டுகளில் தமிழ்க்கல்வி உலகில் பிரபந்த இலக்கியங்கட்கு இருந்த செல்வாக்கை நன்கு புலப் படுத்தும்.

அக்தாதியாகப் பாடும் இலக்கியப்போக்கு எந்த

நாம்ருண்டில் யாரால் தொடங்கி வைக்கப்பட்டது என்பது அறியக்கூடவில்லை. ஆம். அங்காதியின் ஆகி, ஆராய்ச்சிக்கும் எட்டாததாய் உள்ளது. சங்க காலத்திலேயே இத்தகைய சொற்ருெடர் கிலே தொடங்கிவிட்டது. சேர மன்னர்களுள் மிக்க கொன்மையும் பெருமையும் வாய்ந்தவன் பெருஞ் சோற்று உதியன் சேரலாதன் ஆவன். அவனே முரஞ்சியூர் முடிநாகராயர் என்பவர் ஓர் அழகிய பாடலில் போற்றியுள்ளார். அப்பாடலேக் கூர்ந்து கேளுங்கள் :

மண்டினிந்த நிலனும்

நிலனேந்திய விசும்பும்

விசுக்புதைவரு வளியும்

வளித்தலைஇய தீயும்

தீமுரணிய நீரு மென்ருங்கு” (புறம், 3: 1-5)

இப்பாடல் முதலடியின் இறுதிச் சொல்லாகிய

'கிலன்' என்பது அடுத்த அடியின் முதலாகவும், இரண்டாவது அடியின் இறுதிச் சொல்லாகிய விசும்பு என்பது மூன்ருவது அடியின் முதற் சொல்லாகவும், அவ்வடியின் இறுதிச் சொல்லாகிய 'வளி என்பது நான்காம் அடியின் முதற்சொல் லாகவும், அவ்வாறே அவ்வடியின் இறுதிச் சொல் லாகிய தீ என்பது ஐந்தாம் அடியின் முதற்சொல்