பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரபந்த வகைகள்-அந்தாதி 73

லாகவும் வருவதைக் கவனித்தீர்களா? இப்படி ஒர் அடியின் அந்தம் இன்னேர் அடியின் ஆதியாக வருமாறு பாடுவதே அந்தாதித் தொட்ை ஆகும். இந்த இலக்கிய உத்தியினே-அழகினைப்-பயன்படுத்தியே பிற்காலத்தில் ஒரு பெரிய பிரபந்தப் பூங்கா உண் டாக்கப்பட்டது. புறநானூற்றின் காலம் மிகப் பழமையானது. அதிலும், நாம் பார்த்த பாடலேப் பாடியவர் காலம் மிக மிக ப் பழைமையானது. கிறிஸ்து சகாத்தம் தொடங்குவதற்கு முன்னே தோன்றிய பாட்டு அது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றர்கள். அப்படியால்ை, அந்தாதியைப் பற்றிய எண்ணம் எவ்வளவு பழைமையானது என் பது உங்கட்குச் சொல்லாமலே தெரிகிறது அல் லவா? இனி எட்டுத்தொகை நூல்களுள் ஒன்ருகிய பதிற்றுப்பத்தில் நான்காவது பத்தைப்பாடிய காப்பி யாற்றுக் காப்பியர்ை, அப்பத்துப் பாடல்களையும் அ ங் த தி யாக வே இயற்றியுள்ளார். ஆனல், இறுதிப் பாடலின் அந்தம் மட்டும் முதற்பாட்டின் ஆதியோடு ஒன்றவில்லை. சங்க நூல்களாகிய அகநானூற் றி லும் சிறுபாணுற்றுப்படையிலும் அந்தாதித் தொடைகள் வந்துள்ளன.

பிரபந்த வகைகளுள் மிகப் பழமை வாய்ந்த இவ்வந்தாதி இ லக் கி யம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து வந்தது. அங் தாதி அமைப்பை உயிர்கிலேயாக வைத்துக்கொண்டு தமிழ்ப் புலவர்கள் எத்தனை வகையான நூல்களே இயற்ற முடியுமோ, அத்தனே வகையான நூல்களே யும் இயற் றி ைர் க ள்; வெண்பா முதலான