பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#4 காற்றிலே மிதந்தவை

பாவகைகளே எல்லாம் அந்தாதிக்குப் பயன் படுத் திர்ைகள்; தமிழ்ச் சுவையும் பத்திச் சுவையும் அந்தாதி நூல்களில் ததும்பும்படி செய்தார்கள்; சிலேடைகளையும் ய ம க ங் களையும் அவற்றிலே செறித்து வைத்தார்கள்; கண் கண்ட அந்தாதிக் தமிழின் துணேகொண்டு விண்கண்ட தெய்வம் பல கோடியையும் வியந்து விதந்து போற்றி மகிழ்ந் தார்கள். அந்தாதி இலக்கியம் வளர அரசரும் உதவினர். ஆண்டிகளும் உதவினர்கள் ; சைவரும் உதவினர்; சமணரும் உதவினர் ; வைணவரும் பணி புரிந்தனர்; வீரசைவரும் பணி புரிந்தனர்; ஆடவரும் தொண்டாற்றினர்; மகளிரும் தொண் டாற்றினர். ஆம். இந்த உண்மை தமிழ் இலக்கிய வரலாற்றை-தமிழ்ப் புலவர் வரலாற்றைக்-கற் பார் எளிதில் உணரலாம்.

அந்தாதித் தமிழைப் பண்டிதர்களே அன்றிப் பாமரமக்களும் போ ற் றி வளர்த்தார்கள் என் பதற்குச் சான்ருக எத்தனையோ நாடோடிப் பாடல் கள் இருக்கின்றன.

  • முப்பதுட னுென்று மூங்கில்இலை மேலே மூங்கில் இலமேலே துங்கும் பனிநீரே துங்கும் பணிநீரை வாங்கும் வெங்கதிரே'

என்னும் இக்க அழகிய ஏ ற் ற ப் பாட் டி ல் ஒரு செய்யுளுள்ளேயே ஒரடி இறுதி மற்றைய அடிக்கு முதலாக அமையும்படி தொடுக்கும் அந்தாதித் தொடை எவ்வளவு அழகாய் அமைந்துள்ளது பாருங்கள் இவ்வாறு தொடுத்த சொல்லையே பிடித்துத்தொகுத்துத் தனி அந்தாதியாக முடிக்கப்