பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T 6 காற்றிலே மிதந்தவை

இரண்டு அடிகள் மடக்காய் அமைந்துள்ளன. இக் நூல்களே பின்னுளில் யமக அந்தாதி பாடுவதற்கு வழி காட்டின. இந்நூல்கள் எழுந்த காலம் கி. பி. 6-ஆம் நூற்ருண்டு என்பர். இந்நூல்களுக்குப் பின் எழுந்த அந்தாதிகள் காரைக்காலம்மையார் பாடிய அற்புதத் திருவந்தாதியும், சோமான் பெருமாள் காயனர் செய்தருளிய பொன்வண்ணத்தந்தாதி யும், ஆழ்வார்கள் அருளிய அந்தாதிகளும் ஆகும். திருதுசற்றக்தாதி, சமண சமயத்தவரால் இயற்றப் பெற்றது; பெரிதும் போற்றப்படுவது.

இவ்விலக்கியங்கட்குப் பின் ஈரமும் வீ ர மு. ம் ஒருங்கே படைத்த அறுபத்து மூன்று நாயன்மார் கள் வரலாற்றை வகைப்படுத்திப்பாடும் வகை நூலாய் நம்பியாண்டார் நம்பி இயற்றிய திருத் தொண்டர் திருவந்தாதி எழுந்தது. கட்டளைக் கலித் துறையில் இயன்ற இந்நூலே பின்னுளில் சேக் கிழார் பெருமான் திருத்தொண்டர் புராணம் பாடப் பெருந்துணே புரிந்தது என்ருல், இதன் சிறப்பை வரம்பிட்டு உ ை க் த ல் ஆகுமோ? இதற்குப் பின்னர்த் தோன்றிய நூறு நூறு பாடல்களைக் கொண்ட பதிற்றுப்பத்தக்தாதிகள், ஒசை நயமும் சொல்நயமும் பொருள் நயமும் சோப்பெற்று விளங் கும் சீர்மையனவாகும். நூறு பாடல்களையுடையன இந்நூல்கள்; ஆயினும், மனப்பாடம் செய்தலைப் பயனுடைய கலையாகப் போற்றிய பழைய நாளில், கல்வி கற்கும் மாணவர்கள் அந்தாதித் தொடை அமைப்பின் துணேகொண்டு இந்நூல்களே நெட்டுருச் செய்வது எளியதாயிருந்தது.