பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரபந்த வகைகள்-அந்தாதி - 77

இன்னும், அந்தாதி உலகில் தமிழ்ப் புலவர்கள் படைத்துள்ள அற்புதங்களே எண்ணுவார் நெஞ்சம் இன்பக்கடலாகும். வெண்பா அந்தாதி, கலித்துறை அந்தாதி, ஒருவகை ஒசைக்குப் பத்தாகப் பத்துவகை ஓசையில் பல வகை விருத்தங்களால் பாடப் பெறும் பதிற்றுப்பத்தந்தாதி, வண்ணமும் கவிவைப்பும் கவருமல் பதினறு கலை வைப்புக்களே ஒரு பாடலிலேயே அமைத்து அத்தகைய முப்பது பாடல்களே அந்தாதியாக இயற்றும் ஒலி அந்தாதி, அங்கனமே கலி வைப்புக்களே ஒரு பாவில் வைத்து முப்பது பாடல்களால் ஆகிய அந்தாதியாக இயற்றும் கலி அந்தாதி, அடிதோறும் முதற்சீர் மடக்காக வரும் யமக அத்தாதி, திரிபு அந்தாதி, உதட்டோடு உதடு ஒட்டாமல் பாடக்கூடிய நிரோட்டக யமக அந்தாதி-என்று இவ்வாறு பல் வகை யாப்பாலும் அந்தாதிகள் பாடப்பெற்றன.

இப்படி எத்தனையோ வகையான அந்தாதிகள் எண்ணில் அடங்காதனவாய்த் தமிழ் மொழியில் இருப்பினும், கரைந்துருகிக் காரைக்காலம்மையார் பாடிய அற்புதத் திருவந்தாதியும், முதல் ஆழ்வார்கள் ஞானத் தமிழால் இசைத்த அங்காதிகளும், சேரமான் பெருமாள்நாயனார் செந்தமிழ் நலங் கனியப்பாடிய பொன்வண்ணத்தந்தாதியும், கவியரசர் கம்பர் கனிந்துருகிப்பாடிய சரசுவதி அந்தாதியும், சடகோபர் அந்தாதியும், பரஞ்சோதி முனிவர் பாநலம் விளங்கப் பாடிய மதுரைப் பதிற்றுப்பத்தந்தாதியும், குட்டித் திருவாசகமெனக் குவலயம் போற்றும் அதிவீரராம பாண்டியர் பாடிய திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி