பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரபந்த வகைகள்-அந்தாதி 79

பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம் காதல் சிறந்துதின் சேவடியே சேர்ந்தேன்-திறந்திகழும் மைஞ்ஞான்ற கண்டத்து வானுேர் பெருமானே! எஞ்ஞான்று தீர்வ திடர்! இடர் என்று இப்பாட்டு முடிந்தது அல்லவா? அடுத்த பாடலும் இடர் என்றே தொடங்குவதைக் கவனியுங்கள்.

இடர்களேயா ரேனும் எமக்கிரங்கா ரேனும் படரு நெறிபணியா ரேனும்-சுடர்உருவில் என்பருக் கோலத்து எசியாடும் எம்மானுர்க்கு அன்பு:அருது என்நெஞ் சவர்க்கு." அடுத்து பூதத்தாழ்வார் பாடிய இரண்டாம் திருவந்தாதியிலிருந்து இரு பாடல்களைப் பார்ப் போம்.

அன்பே தகளிய ஆர்வமே நெய்யாக இன்புருகு சிந்தை யிடுதிரியா-நன்புருகி ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு ஞானத் தமிழ்புரிந்த நான். ' இப்பாடலின் இறுதியடியின் முதற்சீராகிய ஞானம் என்பதே அடுத்த பாடலின் முதற்சொல்லாய் வரு கிறது பாருங்கள்:

ஞானத்தால் நன்குணர்த்து நாரணன்தன் நாமங்கள் தானத்தால் மற்றவன்பேர் சாற்றினுல்-வானத் தணியமரர் ஆக்குவிக்கும் அஃதன்றே நங்கள் பணியமரர் கோமான் பரிசு? கடைசியாக ஒரு பாட்டு: பூதத்தாழ்வார் பாடிய இர ண் டாம் திருவந்தாதியின் முதற்பாட்டைச் சற்றுமுன் கேட்டீர்கள். அப்பாடல் எந்தச் சொல்