பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

இலக்கியத்தில் இயற்கை : நதியும் கரையும்

கதியும் கரையுமே நாகரிகம் வளரும் தொட்டில்; சமயம் வளரும் சமரசப் பூங்கா; அரசியலை வாழ் விக்கும் இயற்கை அரண் ; கலைஞன் கண்ணிற்கு ஒளி தரும் சுடர் விளக்கு; புலவன் பாட்டிற்குப் பொருள் தரும் கருத்துக் கருவூலம்; மக்கள் வாழ் விற்கு உயிர் ஊட்டும் அமுத சுரபி. இத்தகைய பெருமை வாய்ந்த நதியையும் கரையையும் பற்றிப் பாடாத தமிழ்ப் புலவர் இல்லை; பேசாத தமிழ் இலக்கியமும் இல்லே.

மனிதகுல சாகரிகத்தின் சிறந்த கூறுபாடுக ளனைத்தும் நதிக்கரை நாகரிகத்தின் விளைவே என்று அறிஞர் உலக ஆராய்ச்சி பறை சாற்று கின்றது. மறுக்க முடியாத அவ்வுண்மையை மனத் தில் வைத்துக்கொண்டு பார்க்கும் போது தமிழர் நாகரிகத்தின் சீர்மையும் புலனுகும். ஒப்புயர்வற்ற பெருமை வாய்ந்தது பழமை சான்ற நம் தமிழ் நாகரிகம் என்ருல், அதற்குக் காரணமாய் விளங்கிய ஊற்றுகள் நம் நாட்டில் பாய்ந்து விளையாடும் பல் வேறு நதிகளே என்பதில் ஐயமுமுண்டோ ? இவ் வுண்மையைக் கவியாசர் பாரதியார் மிகத் தெளி வாக உணர்ந்திருந்தார் என்பது,

காவிரி தென்பெண்ணை பாலாறு-தமிழ்

கண்டதோர் வையை பொருனைந்தி-என 6 - -