பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காற்றிலே மிதந்தவை

1 கவிதையின் உயிர்

கவிஞன் ஒரு சிறந்த கலைஞன். உலகமே அவன் பல்கலைக் கழகம். இயற்கைச் சத்திகளே அவன் நல்லாசிரியர்கள். காற்றெனும் வான தேவன் மண்ணுலகத்து நல்லோசைகளே எல்லாம் ஏந்தி வந்து, அவன் திருச்செவிகளில் இசைக்கச் செய்கிருன், அவ்வோசைகளிலே உள்ளத்தைப் பறி கொடுக்கிருன் கவிஞன். அவன் உள்ளம்-சொல் -சிந்தனே-எல்லாம், அந்த ஓசை மயமாக மாறி விடுகின்றன. கவிஞனது இதயத்தைக் கொள்ளே கொண்டு பண்ணுருவம் பெற்ற அந்த மண்ணு லகத்து நல்லோசைகள்' என்ற முத்துப் பல்லக்கில் மோகனப் புன்முறுவலுடன் கவிதையாம் அழகரசி காலம் என்ற பெருஞ்சாலேயில் கலைவாணர்-கவி வாணர்-கைகூப்பிப் புகழ் பாடத் தன் இன்பப் பயணத்தைத் தொடங்குகிருள்.

இனி, இன்றைய பேச்சில், கவிதைக்கு ஒசை உடல் என்ருல், உணர்ச்சிதான் அதன் உயிர்' என்ற உண்மையைக் காண்போம்:

கவிதைக்கு மட்டுமன்று; எல்லாக் கலைகளுக் குமே அடிப்படையாக வேண்டுவது உணர்ச்சிதான். உணர்ச்சி இல்லையானல், எந்தக் கலேயும் தேகன்ற