பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 காற்றிலே மிதந்தவை

மேவிய யாறு பல்வோடத்-திரு

மேனி செழித்த தமிழ்நாடு. என்று சிங்தை குளிர்ந்து அவர் பாடிய நயம்செறிந்த பாடலால் நமக்கு நன்கு விளங்குகிறது.

அல்லும் பகலும் அலேந்து திரிந்து ஆயிரம் காலால் நடந்து வரும் ஆற்றின் அழகையும் அதன் அழகிற்கு ஒர் அழகு செய்யுமாப்போல அவ்வாற் றின் க ைர யி ல் பச்சைப்பசேலெனப் பரந்து விரிந்து கிடக்கும் இனிய பொழில்களும் நெடிய வயல்களும் காண்பார் கண்கட்குக் கழிபேருவகை அ வரி க் கு ம் தன்மையனவாகும். சாதாரணக் கண்கள் படைத்த நமக்கே நதியும் கரையும் அளிக் கும் காட்சி கண் கொள்ளாக் காட்சி என்ருல், கலைக்கண்கள் படைத்த புலவர் பெருமக்கட்கு அவை வழங்கும் பேரின்பப் பெருக்கைப்பற்றிச் சொல்லவும் வேண்டுமோ இயற்கை அன்னேயின் கருணை வெள்ளமாய் விளங்கும் ஆற்றின் அழகையும் அவள் அருட்கரங்கள் போல அமைந்து கிடக்கும் கரைகளின் எழிலேயும் பருகிக் களிவெறி கொண்ட கலைஞர் உள்ளத்தில் கற்பனை ஊற்றெடுப்பதும் புலவர் காவில் செந்தமிழ்ப் பாடல் த. வ ழ்வதும் இயற்கையே அன்ருே ?

நாட்டின் நல்வாழ்விற்கு விழியும் இமையும் போல்வனவாய் விளங்கும் நதியையும் கரையையும் பழந்தமிழ் நூல்களாகிய பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும் அழகொழுகும் சொல்லோவியங்க ளாய்த் தீட்டிக் காட்டும் திறம் தமிழ்ச் சுவை நுகர விரும்புவார்க்குப் பெருவிருந்தாய் விளங்குகிறது.