பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நதியும் கரையும் 33

தமிழகத்து ஆறுகளுள் எல்லாம் கலைசிறந்த காவிரியாறும் அதன் கரையும் சங்க நூல்களாகிய பத்துப்பாட்டிலும் புறநானூற்றிலும் அழகு மிக்க எழிலோவியமாய்க் காட்சியளிக்கின்றன. வானக் துக் கோள்களெல்லாம் தங்கள் நிலை மாறினும், வற்கடம் தோன்றுதற்கு அறிகுறியாக விண்ணிலே தீக்குறிகள் பல தோன்றினும், வற்ருத வளமுடை யாள் காவிரித்தாய். பொய்யாத வானம் பொய்ப்பி லும், தான் பொய்யாத தகைமைசால் பொற்கொடி அவள். இவ்வுண்மையை,

வசையில்புகழ் வயங்குவெண்மீன்

திசைதிரிந்து தெற்கேகிறுத்

தற்பாடிய தளியுணிவிற்

புட்டேம்பப் புயன்மாறி

வான்பொய்ப்பினுந் தான்.பொய்யா

மலைத்தலேய கடற்காவிரி' (பட்டினப்பாலே, 1-6)

என்ற பட்டினப்பாலே பாடிய உருத்திரங்கண்ண ர்ை வாக்கும், -

" அலங்குகதிர்க் கனலி நால்வயின் தோன்றினும்

இலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும் அந்தண் காவிரி வந்துகவர் பூட்டத் தோடுகொள் வேலின் தோற்றம் போல ஆடுகட் கரும்பின் வெண்பூ துடங்கும் நாடெனப் படுவது நினதே." (புறம். 35 : 6-11) என்ற வெள்ளைக்குடி நாகனரின் புறப்பாடற்பகுதி யும் வலியுறுத்தும்.

வற்ரு வளம் கொழிக்கும் இத்தகைய பொன்னி நதியின் பேரருளால் சோழநாடு சோற்று வளம்