பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 காற்றிலே மிதந்தவை

கைகாட்டி வாவெனக் கரையும் கலங்கரை விளக்கம் ஓங்கித் திகழ்ந்த அப்பூம்புகார், காவிரி கடலொடு கலக்குமிடத்திலேதான் அமைந்துள்ளது. அங்கு அ மை ங் த அத்திருநகரின்-காவிரிப்பூம்பட்டினத் தின்-பெருமையை எ ல் லாம் விரித்துப் பேசும் உருத்திரங்கண்ணனுர், க ரி கால் வளவன் கரை கட்டிப் போற்றிப் பெருமிதம் கொண்ட காவிரியாறு கடலொடு கலக்கும் காட்சியை என்றும் மங்காத் தமிழ் ஒவியமாக-இலக்கியச் சித்திரமாகப்-பட்டினப் பாலையில் வரைந்து காட்டுகின்ருர். பேர்லேக ள் எழுந்து முழங்கும் கடலிலேபோய்க் காவிரி கலப்பது மாமலைகளிலே சென்று கார் முகில் கள் படிவது போன்று கோன்றுகிறது அவர் கண்கட்கு. குடகு மலையிலே தோன்றிய காவிரி, நடந்து வந்த வழி யெல்லாம் கன் கடமையைக் கண்ணும் கருத்துமாய் ஆற்றிவந்திடினும், தன் அன்னேயின்பால் கொண்ட காதலில் சற்றும் அயர்வு கொள்ளாதவள்போலக் கடலிலே கலக்கப் பாய்ந்து ஓடுகின்ருள். அத்திருக் காட்சி உருத்திரங்கண்ணனரின் உணர்வுமிக்க விழி கட்குத் தாயின் மார்பைத் தழுவப் பாய்ந்து செல்லும் குழந்தையை கினேப்பூட்டுகிறது.

"மாமலை ய8ணந்த கொண்மூப் போலவுந்

தாய்முலை தழுவிய குழவி போலவுந் தேறுநீர்ப் புணரியொ டியாறுதலை மணக்கும் ”

(பட்டினப்பாலே, 95-97) என்பது அக்கவிஞர் கற்பன.

சோழநாட்டை வாழ்விக்கக் காவிரி நல்லாள் வாய்த்ததுபோலப் பாண்டிநாட்டின் பெருமையாய்