பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நதியும் கரையும் 3?

புகழாய்-விளங்கும் பெருமை பெற்றவள் வையை என்னும் பொய்யாக் குலக்கொடி. பத்துப்பாட்டுள் ஒன்ருகிய மதுரைக்காஞ்சி வையையின் பெருமை யையும் அதன் க ை யிலே அமைந்த மூதாரின் ஏற்றத்தையும் முழங்குகிறது. பன்மலர்களேயும் தன்மேல் போர்த்துவரும் வையை வழங்கும் காட்சி, காண்பார் கண்களே இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தும். எண்ணற்ற மலர்களே ஏந்திவரும் வையை ஆறு எழில் மிக்கதொரு மாலே போல விளங்கு கி ன் ற தாம். அதன் கரைகளிலே பானர் இருக்கைகள் பற்பல உண்டாம். தமிழ் வையையின் வரம் பி ட் டு க் கூறவொண்ணுப் பெரும்புகழில் நெஞ்சைப் பறி கொடுத்த புலவர்களுள் ஒருவராகிய மாங்குடி மருத னர், இவ்வுண்மையைத் தமக்கே உரிய தண்டமிழ் நடையில் சித்திரித்துக் காட்டுகின்ருர் :

தாதுசூழ் கோங்கின் பூமலர் தாஅய்க் கோதையி னுெழுகும் விரிநீர் நல்வரல் அவிரறல் வையைத் துறைதுறை தோறும் பல்வேறு பூத்திரட் டண்டலே சுற்றி அழுந்துபட் டிருந்த பெரும்பாண் இருக்கையும்’

(மதுரைக்காஞ்சி, 338-342) அவ்வையையைத் தமிழ் வடிவாகவே கண்டு அதன் அழகையும் அதன் கரைகளில் கிகழும் நிகழ்ச்சிகளையும் மிக விரிவாகப் பேசும் சங்கநூல் பரிபாடலே என்றல் மி ைகயா கா து. எழுபது பாடல்களைக் கொண்டதாய் விளங்கிய இந்நூலில் இப்பொழுது நாம் காணக்கிடைப்பன இருப்பத் திரண்டு பாடல்களேயாகும். அவற்றுள்ளும் எட்டுப்