பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 - காற்றிலே மிதந்தவை

பாடல்கள் வையையின் வருணனையாகவே அமைந் துள்ளன. சங்க காலத் தமிழர் இயற்கையோடு இரண்டறக் கலந்த இன்ப வாழ்வு வாழ்ந்த பெருங் திருவினர். எனவே, அற்றை நாள் புலவர்களின் பாடல்களிலும் இயற்கை வருணனையும் வாழ்க்கை வருணனையும் பிரிக்க முடியாத வகையில் பின்னிக் கிடந்து சிறந்த இன்பம் பயக்கின்றன. சுவை மிக்க இப்புனேந்துரைகளைப் பரிபாடலில் பரக்கக் காணலாம். வையை ஆற்றில் மக்கள் புனல் விளை யாட்டயரும் காட்சியையே பெரிதும் போற்றுகிறது பரிபாடல். ககரமாங்கர் அனைவரும் நதிக்கரை யில் குழுமி நீ ர் விளே ய ர டு ம் நிகழ்ச்சிகளைப் பரிபாடலில் கானுந்தொறும் நம் கினேவெல்லாம் சங்ககாலத் தமிழ் மக்களின் கவலை குறைந்த நாகரிகக் கலே வாழ்விலேயே ஒன்றிவிடுகிறது. அங்காளில் வாழ்ந்த தமிழ் மக்களின் அகவாழ்வும் புறவாழ்வும் வையை நதியிலும் கரையிலும் அவர் கள் ஆ டி ய ஆட்டத்திலும் பாடிய பாட்டிலும் கெற்றெனப் புலனுகின்றன. பரிபாடலின் இறுதிப் பாடலாய் அமைந்துள்ள பாட்டு, வையையையும் அதை ஒட்டிய மக்களின் வாழ்க்கையையும் செஞ் சொல் ஒவியமாய்த் திகழச்செய்கிறது. அதை மட்டும் ஈண்டுக் காண்போம்:

பாண்டிய அரசன் போரின்கண் களிறுகளை அணிவகுத்து கிறுத்திற்ைபோல வானத்தில் முகில் கூட்டம் திரண்டது. வழுதியின் போர் முரசொலி போல அம்மேகங்கள் இடி முழக்கம் செய்தன. மீனவன் மாற்ருர்மீது சொரியும் கணேகளைப்போல