பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நதியும் கரையும் 89

மழைத்துளிகள் சிதறின. மதுரை வே க் த ன் கையில் விளங்கிய வேலைப்போல மின்னல் ஒளி உமிழ்ந்தது. மாறனது கருணேயைப்போல மேகங் கள் மழை பொழிந்தன. அவனுடைய வீரப்படை யாண்டும் நிறைந்தது போல எங்கும் .ெ வ ள் ள ம் பரந்து வயல்களில் புகுந்தது. வையை ஆற்றிலே வெள்ளம் கரை புரண்டு ஓடியது. அப்போது நீர் விளையாட்டிற்கு ஏற்ற அ ரிை க ல ன் க ளு டன் மகளிரும் மைந்தரும் மதுரை மாநகரிலிருந்து புறப் பட்டனர். பத்து வகைத் து வர் க ளே யும் கறும் புகைக்கு உரிய அரும்பொருள்களையும் சந்தனத் தையும் நீர்வீசு கருவிகளையும் மதுவையும் பூந்துகில் களேயும் ஏந்திய கையினராய்ப் பலர் அவர்களைப் பின் தொடர்ந்தனர். இவர்கள் செய்த தவப்பயன் பெரிது!’ எனக் கண்டோர் போற்ற, இளைஞர்கள் தமக்குரிய மகளிருடன் வையைக் கரையில் நெருங் கினர்கள். இக்காட்சியைக் கண்ட சங்கப் புலவர் நெஞ்சம் அடைந்த உவகை, வெள்ளம் போன்றே தமிழ்ப்பாட்டாய்ப் பொங்கியது. ைவ ைய யி ன் கரையிலே கூடியிருக்கும் மகளிரால் வையை அழ குற்றதோ, அன்றி வையை வெள்ளத்தால் அம் மகளிர் அழகு பெற்றனரோ! என்று அவர் பாடு கின்ருர், மைந்தரையும் மகளிரையும் நதியையும் கரையையும் சேர்க்கின்ற அழகு தேர்தற்கு அரிது என்று தெரிவிக்கின்ருர் :

வாரணி கொம்மை வகையமை மேகலை ஏரணி யிலங்கெயிற் றின்ன கையவர் சீரணி வையைக் கணிகொல்லோ! வையைதன்