பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ காற்றிலே மிதந்தவை

நீரணி நீத்த மிவர்க்கணி கொல்'எனத் தேருநர் தேருங்காற் தேர்தற் கரிதுகாண் தீரமும் வையையும்.”

(பரிபாடல் 22 : 30-35) சங்க நூல்களே அடுத்து நம் நெஞ்சை அள்ளும் கீர்மை வாய்ந்த காப்பியம் செஞ்சொற்சிலப்பதி காரமேயாகும். அழகெல்லாம் ஒருருவாய்க் திரண்ட ஒரு பெண்ணேப்போல அலைக் கைவீசி நடந்து செல் அம் காவிரியின் அழகைப் புலவர் பெருமானகிய இளங்கோ அடிகள் கற்பனை நலம் விளங்கக் காட்டும் திறம் இலக்கியப் பித்தர்கட்குப் பேரின்பம் தருவ காகும். பொன்னியாற்றிலே வெள்ளம் கரைபுரண்டு வந்துவிட்டது. விரைந்துவரும் வெள்ளத்தைக்கண்டு உழவர் செய்யும் முழக்கமும், மதகுகளே நீர்த்திரள் தாக்குவதால் எழும் பேரோசையும், ஆங்காங்குக் கரைகளிலே உடைப்பு ஏற்பட்டதால் எழும் ஆர வாரமும், புதுநீர் விழாவைக் கொண்டாடுவோரால் விளையும் பேரொலியும் காவிரிக் கரையிலே பெரு முழக்கமாய்க் கேட்கின்றன.

嶺 燦 弥 谍

இன்னிசை வண்டுகள் ஒலிக்க, அழகு மலர்களே ஆடையாகப் போர்த்துக்கொண்டு, கயல் போன்ற கண்களை விழித்து, ஒல்கி நடந்து வருகின்ருளாம் காவிரி நங்கை கா விரிக்க ைரயிலே மயில்கள் தோகை விரித்தாட, குயில்கள் ஆர்வமுற்றுப்பாட, அழகிய மலர்மாலேகள் தன் மார்பிலே அசைந்தாட நடந்து வருகின்ருளாம் காவிரிப்பெண் !