பக்கம்:காலக் குறிப்புகள்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

32 கண்டு பிடிப்பதற்காக ஒரு சைனியத்தை மைலர் பூருக்கு அனுப்பினர்கள. கி.பி. 1522-ல் மைலாபூரில் சாங்தோம் எனும் இடத் தைப் பிடித்தார்கள். இவர்கள் அபிவிர்த்தி காலம் சுமார் கி.பி. 1505-1600. போற்றிப்பஃதொடை-உமாபதி சிவாசாரியார் இயற்றி யது, கி.பி. 1809 (செல்வகேசவராய முதலியார்) போஜராஜன்-வட இந்தியாவில் ஆண்ட பிரபல அரசன், காலம் கி பி. 997-1053 (மிஸ்டர் டட்) பெளத்தாயனர்-சம்ஸ்கிருத ஆசிரியர், கி.மு. 5-ம் நூற்ரு ண்டு, (பூலர்துரை அவர்கள்) மகம்மத் கஜினி - இந்தியாவின் மீது 12 முறை படை யெடுத்த அரசன், கி.பி. 1001-1030, இவன் சோம நாதபுரம் பிடித்தது கி.பி. 1024. மகாபலிபுரம்-இங்கிருக்கும் அர்ஜுனன் தபம் அல்லது பகீரதன் தபம் எலும் கல் வெட்டும், கோவர்த்ன கிரி மண்டபமும் வெட்டப்பட்ட காலம் கி.பி. 625-650. மங்கம்மாள்-மதுரையில் ஆண்ட ஒர் ராணி, ஆண்ட காலம் கி.பி. 1689-1706. மச்ச புராணம் - வடமலை பிள்ளை தமிழில் எழுதியது, கி.பி. 107 (திரு. அகவாத வினயகம் பிள்ளை) மண்டல புருஷர்-சூடாமணி ஆசிரியர், காலம் சுமார் கி.பி. 1508-153). மணவாளமாமுனிகள்-வைஷ்ணவ மதத்தில் தென்கலை ஸ்தாபித்தவர், கி.பி. 15-ம் நூற்ருண்டு. மணிமேகலை-பஞ்ச காவியங்களில் ஒன்று, சமண நூல், கி.பி. 9-ம் நூற்றண்டு (கும்பகோண்ம் சடகோப ராமர் அஜாசாரியார்), கி.பி. 2-ம் நாற்ருண்டு (பூரீ வி. ராம சநதர தீட்சிதர்), கி.பி. 500 (பூரீ பி. ரீனிவாச ஐயங் கார்). மத்வாசாரியார்-ழத்வமகஸ்தாபகர், பிறப்பு கி.பி. 1238, மரணம் கி.மு. 1298.