பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆ. கடைச் சங்க காலத்திற்கும் விஜயாலயன் காலத்திற்கும் இடைப்பட்ட காலச் சோழர் நிலை கடைச சங்க காலம் எனக் கருதப்படும் கி. பி. இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் தமிழகத்தில் துழைந்த களப்பிரர்களால், சேர, சோழ, பாண்டியப் பேரரசுகள் அழிவுற்றன. அந்நாள் தொட்டு, அக்களப்பிரர் ஆட்சி ைவித்து விட்டு, கோண்ல. நாட்டில் பல்லவர் களும், பாண்டி நாட்டில் சண்டிய களும் அமைத்த பல்லவ பாண்டியப் .ோரசுகள் செல்வாக்கிழந்து போக, சோழப் பேரரசுக்கு விஜயாலயன் அடிகோவிய கி. பி. 850 வரை சோழர் வரலாற்றில் இருள் சூழ்ந்தே கிடந்தது. இந்த எழு நூறு ஆண்டுகாலச் சோழர் வரலாற்றை அறிய துணை புரியவல்ல வரலாற்றுச் சான்று எதுவும் கிடைத்திலது. சோழர்களைப் பற்றிப் பல்லவர் பாண்டியர் பட்டயங்களும் பெரிய புராணமும் ஆங்காங்கே குறிப்பிடும் ஒரு சில குறிப்பு கள் மட்டும் கிடைத்துள்ளன. புத்த தத்தர் காலத்துவனான அச்சுதக் களப்பாளன், சேர, சோழ,பாண்டியரை வென்றான். அச்சுதக்காப்பாள்ன் ஆட்சி புரிந்து கொண்டிருந்த போது, காவிரிக் கரையில் பூத மங்கலம் எனும் இடத்தில் இருந்து தம்முடைய விநயவிநிசயம், அபிதம்மாவதாரம் என்ற இருநூல்களையும் இயற்றியதாகக் கூறும் புத்ததத்தர், தம்முடைய பிறப்பிடம் உறையூர் என்று கூறியிருப்பதோடு, காவிரிப் பூம்பட்டினத் தின் சிறப்பையும் வாயாறப் புகழ்ந்துள்ளார்.