பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 காலந்தோறும் தமிழகம் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆட்சி புரிந்த புத்தவர்மன், கடல் போன்ற சோழர்படைக்கு வடவைத் தீ போன்று விளங்கினான் எனக்கூறுகிறது, வேலூர்ப் பாளையப் பட்டயம். மகேந்திரவர்மன் தந்தை யாகிய சிம்: விஷ்ணு, காவிரி பாயும் சோழ நாட்டை வென்றான் எனக் கூறப்படுகிறது. மகேந்திரவர்மன் சோழரை வெற்றி கொண்டான் என்றும், திருச்சிராப்பள்ளி மலை, சோழ நாட்டின் மணி முடியாம் என்றும் மகேந்திர வர்மன் காலத்துக் கல்வெட்டொன்று கூறுகிறது. சாளுக்கியப் புலிகேசி, பல்லவரை வென்று சேர, சோழ, பாண்டியர்க்கு மகிழ்ச்சி அளித்தான் என்றும் காவிரிக்கரை உறையூரில் பாசறை கொண்டான் எனவும் கூறப்படுகிறது. மேலே கூறிய குறிப்புகளால், தமிழகத்துள் புகுந்த களப்பிரர் களையும், பல்லவர்களையும், புகவொட்டாது தடுத்து நிறுத்தசேரர்களும், பாண்டியர்களும் மேற்கொண்ட போர் முயற்சிகளில் சோழர்களும் அவர்களுக்குத் துணையாக 'நின்று களப்பிரர்களையும், பல்லவர்களையும் எதிர்த்துப் போராடினர் என்றும், ஆனால் அம் முயற்சியில் சேர, பாண்டியர்களுக்குக் கிடைத்த தோல்வியே சோழர்களுக்கும் கிடைத்தது என்றும் தெளிவாகின்றன. அடுத்து கூறப்படும் சான்றுகள் இரண்டாலும், பல்லவர் முன் நிற்க மாட்டாது தோல்வி கண்ட சோழர்கள், இனி அவர்களைப் பகைப்பதில் பயனில்லை; தங்களுக்கும் காலம் வரும் வரை அவர்களோடு நட்புபூண்டு வாழ்வதே அறிவுடை மையாகும் என உணர்ந்து செயல் பட்டனர் என்பது தெளிவாம். - - தந்திவர்மன் காலத்தில், திருச்சானூர் இளங்கோயில் பெருமானுக்குச் சோழ நாட்டுச் சோழனார் உலகப் பெருமானார் என்பவர், திருவிளக்கிற்காக, முப்பதுகழஞ்சு பொன் அளித்தார் எனக் கல்வெட்டு ஒன்று கூறுகிறது.