பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார். 103. கும்பகோணம் போரில் பூரிமாற பூரீவல்லப பாண்டி யனிடம் தோற்ற பல்லவனுக்குத் துணையாக வந்தவருள் சோழர்களையும் குறிப்பிடுகிறது சின்னமனூர்ப் பட்டயம். பனிரெண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாயினும், பல்லவர் காலத்து நிகழ்ச்சிகளைத் தெளிவாக எடுத்துக் கூறும் பெரிய புராணம், திருஞான சம்பந்தரால், சைவனாக மாறிய பாண்டிய மன்னனின் மனைவியாகிய மங்கையளிக் கரசி, சோழர் குலத்தில் பிறந்தவள் (வளவங்கோன் பாவை) என்றும், புகழ்ச் சோழ நாயனார் ன்னும் பெயர் கொண்ட ஒரு சோழ அரசன் அதிகனை வென்றான்; கருவூரைக் கைப்பற்றினான் என்றும், ஏயர்கோன் கலிக்காம நாயனார் சோழர் படைத் தலைவராவர் என்றும்,சுந்தரரும்,சேரமான் பெருமாளும் பாண்டிய நாடு அன்டந்த போது அவர்களை வரவேற்றவர்களுள், பாண்டியன் f{}JG5 33; Gf. மணந்து பாண்டியன் அவையில் இருந்த சோழர் குலச் சிற்றரசனும் ஒருவன் என்றும், பழையாறை வடதளிப் பெருமானை வழிபட வந்த திருநாவுக்கரசர் வேண்டிக் கொள்ள பழை யாறை ஆண்டு கொண்டிருந்த சோழ மன்னன் ஒருவன் அப் பெருமானுக்கு விமானமும் எடுத்து நாள் வழிப்பாட்டிற்கும் வகை செய்தான் என்றும் கூறுகிறது. -- - அரங்கப் பெருமானை அல்லது வேறு அரசரை மணவேன் எனச் சூளுரைத்து உயர்ந்த உறையூர் நாச்சியார், உறையூர் ஆண்ட தர்மவர்மன் என்ற சோழ மன்னன் மகளாவர் என்றும், திருமங்கை ஆழ்வார், சோழப் படைத் தலைவர் என்றும், திவ்வியசூரி சரிதமும், குருபரம்பரையும் கூறுகின்றன. மேலே கூறிய வரலாற்றுச் சான்றுகளால், தமிழக வரலாற்றின் இருட்காலம் எனக் கூறப்படும் அக்காலத்தில், சோழர்கள் தம் அரசிருக்கை யாகிய உறையூரை விட்டு வெகு தொலைவு சென்று விடாது, அதைச் சுற்றி உள்ள இடங்களையே இருப்பிடமாகக் கொண்டு, காலம் வரும் வரை காத்திருக்கும் கருத்தோடு, சில காலம் பல்லவர்க்குத்