பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 காலந்தோறும் தமிழகம் துணையாய் நின்று பாண்டியரை எதிர்த்தும், சில காலம் பாண்டியர்க்குத் துணை நின்று பல்லவரை எதிர்த்தும், அவ்விரு இனத்தவரோடும் மாறி மாறி நட்புறவும் மண உறவும் கொண்டு காலம் கழித்து வந்தனர் என்பதும், அந்நிலையிலும் சைவத்தையும், வைனத்தையும் பேணி வளர்க்கும் பணியை விடாது மேற்கொண்டிருந்தனர் என்பதும் தெளிவாகின்றன. நாவரசர் வந்தபோது, பழையாறையில், சோழ மன்னன் இருந்தான் எனப் பெரிய புராணம் கூறுவதாலும், விஜயா லயன் வழி வந்த சோழப் பேரரசின் இரண்டாவது தலை நகராகப் பழையாறை விளங்கியதாலும், சோழப் பேரரசர் பலரும் அப் பழையாறையில் வாழ்ந்திருந்தமையாலும், ஆங்கு ஒரு பேரரசு நடைபெற்றது என்பதை உறுதி செய்ய வல்ல நினைவுச் சின்னங்கள் இன்றும் காணப்படுவதாலும்: இடைக் காலச் சோழர்கள், பழையாறை நகரையே தம் வாழ்விடமாகக் கொண்டனர் எனக் கொள்ளலாம். - இஃது இங்ங்ணமாக, கி. பி. ஏழாம் நூற்றாண்டில் தமிழகம் வந்து சுற்றிப் பார்த்து விட்டுத் திரும்பிய சீன வழிப் போக்கனாகிய யுவான் சுவாங், சோழ நாடு, காஞ்சிக்கு வடமேற்கில் இருப்பதாகக் கூறியிருக்கும் குறிப்பைக் கொண்டும், கடப்பை, கர்நூல் மாவட்டங்களில் கிடைக்கும் தெலுங்குக் கல்வெட்டுக்களும், செப்பேடுகளும் ரேணாடு 7000 என்ற நாட்டை ஆண்ட அரசர்கள், காவிரிக்குக் க்ரை கட்டிய கரிகாற் சோழனின் வழி வந்த வராவர் எனக் கூறுவதோடு, அவ்வரச குடும்பத்தவர் பெயர்களாக, சோழ மகாராஜா, சோழ மகா ராஜாதி ராஜா, சோழ மாதேவி, இளஞ்சோழ மாதேவி என்பன போலும் பெயர்களைக் குறிப்பிடுவதைக் கொண்டும், சோழர்களில் ஒரு பிரிவினர் தமிழகத்தைக் கைவிட்டு வடநாடு சென்று ஆங்கு வாழ்ந்திருத்தலும் கூடும் எனக் கூறுவர் சில வரலாற்று ஆசிரியர்கள். . *