பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ. சோழப் பேரரசு - தோற்றமும் வீழ்ச்சியும் - தோற்றம் சங்ககாலத்தில் புகழ் ஓங்க அரசோச்சியிருந்த மூவேந்தர் களுன், களப்பிரர் நுழைவால், சோ-பாண்டியப் பேரரசுகள் நிலை குலைந்து போனது போலவே, சோழப் பேரரசும் நிலை குலைந்து போய் விட்டது. அரசு நிலை குலைந்து விட்டது என்றாலும், அக்குடிவந்த சோழர்கள் அறவே அழிந்து விடாது. தஞ்சைக்கடுத்த பழையாறையில் குறு. நிலத்தலைவர்களாய் வாழ்ந்து வந்தார்கள். களப்பிரர் களை வென்று, வடக்கே பல்லவர்களும், தெற்கே பாண்டியர் களும் தங்கள் பேரரசுகளை நிறுவிய போதும் சோழர் களால் தங்கள் அரசை நிலை நிறுத்த முடியவில்லை. தமிழகத்துக்குப் புதியவர்களாகிய பல்லவர்களைத் தடுத்து நிறுத்தும் பணியில், தொடக்கத்தில் பாண்டியர்க்ளோடு கூடிப் பல்லவர்களை எதிர்த்தார்கள் என்றாலும், பல்லவர் பகைமை, தமக்கு ஆக்கத்தினும் அழிவே விளைவிக்கும் என்பது உணர்ந்து பல்லவர்களோடு நட்புறவு கொண்டு வாழ்ந்து வந்தனர். - சோழர் வழிமுறை கூறும், அன்பீல், ஆனைமங்கலம், திருவாலங்காடு பட்டயங்கள், கடைச்சங்க காலத்தவனாகிய செங்கணான், அவன் மகன் எனக் கருதப்படும் நல்லடி ஆகியோர்க்குப் பின்னர், விஜயாலயன் பெயரையே குறிப் கா தமி-7