பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் - 107 பாண்டியர் வெற்றி கொள்ள, பல்லவர் தோல்வி கண்ட குடமுக்குப் போரிலும், பல்லவர் வெற்றி கொள்ள பாண்டியர் தோல்வி கண்ட அரசிலாற்றுப் போரிலும், பல்லவ வேந்தனாகிய நிருபதுங்கனுக்குத் துணையாக இருந்து போரிட்டவன் விஜயாலயனே. இவ்வாறு பல்லவ நண்பர்க்குப் படைத் துணையாகவும், தளர்ந்து வீழ்ந்து போன தம் அரசை மீண்டும் நிலை நிறுத்தவும், விஜயாலயன் தன் வாழ் நாளெல்லாம் ஓயாது போரிட்டமையால், அவன் மார்பு, விழுப்புண்களின் வாழிடமாகி விட்டது. அவன் மார்பில் பெற்ற புண்களின் எண்ணிக்கை தொண்ணுாற்றாறு என எண்ணிக் காட்டிப் புகழ்கின்றன மூவர் உலாக்களும். "மீதெல்லாம் - . எண்கொண்ட தொண்ணுளற்றின் மேலும் இருமூன்று புண்கொண்ட வென்றிப் புரவலன்" "அடுத்தடுத்துச் - சீறும் செருவில் திருமார்பு தொண்ணுறும் ஆறும்படு தழும்பின் ஆரத்தோன்' - புல்லார் - தொழும்புடைய ஆகத்துத் தோண்ணுாறும் ஆறும் தழும்புடைய சண்டப்பிரசண்டன்” போரில் வெற்றி தேடித் தருவாள் கொற்றவையே எனும் உணர்வால். தாம் பெற்ற வெற்றிக் காகக் கொற்ற வையே வழிபடும்மரபில் வந்தவனாதலின், தொண்ணுாற்றாறு விழுப்புண் பெற்ற விஜயாலயனும், தான் வென்று கொண்ட தஞ்சையில் கொற்ற வைக்குக் கோயில் எடுத்து வழி பட்டான். - இராசகேசரி முதலாம் ஆதித்தன் தஞ்சையில் சோழர் பேரரசை விஜயாலயன் நிறுவி .ணான் என்றாலும், பகைப்பயம் ஒழிய அதை நிறுவினான்