பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 காலந்தோறும் தமிழகம் அல்லன்; வடக்கில் பல்லவனும் வலி குன்றினான் அல்லன்: தஞ்சையில் அரசு கண்ட நிலையிலும், சோழர், பல்லவர்க்கு. அடங்கிய நண்பராகவே வாழ வேண்டி இருந்தது; அது போலவே, தெற்கே பாண்டியனும், சோழரையும், அவர் நண்பராம் பல்லவரையும் நிம்மதியாக வாழ விட்டான் அவ்லன், அதனால், சோழப் பேரரசை மீண்டும் புத்துயிர் பெறச் செய்தவன் விஜயாலயனே எனினும், அதைப் பகை வர்க்குப் பணியாத் தனி அரசாக நிறுவியவன் அவன் மகன் ஆதித்தனே ஆவன். அரசிலாற்றுப் போரில் பல்லவர் கையில் தாம் பெற்ற தோல்வியாலான பழியைப் போக்கிக் கொள்வதற்கான காலத்தை எதிர் நோக்கி இருந்தனர் பாண்டியர்; பல்லவர் பேரரசனான நிருபதுங்கன் இறந்து போக, அவன் மகன் அபராஜிதன் அரியணையில் அமர்ந்தான்; விஜயாலயனும் முதுமை அடைந்து விட்டான்; பாண்டியர் ஆட்சி பொறுப் பேற்றிருந்த வரகுணன், தான் வெற்றி கோடற்கு அதுவே ஏற்புடைய காலம் என எண்ணிப் பல்லவன் மீது போர் தொடுத்தான். கி.பி. 880-ல், கும்பகோணத்திற்கு வடமேற்கில். ஐந்துகல் தூரத்தில் உள்ள திருப்புறம்பியம் எனும் இடத்தில் பெரும்போர் நடைபெற்றது. பல்லவனுக்குத் துணையாக, விஜயாலய சோழன் மகன் ஆதித் தனும், கங்க அரசன் பிருதிவிபதியும் வந்தமையால், போரில் பிருதிவிபதியைக் கொல்லுமளவு கடும்போர் செய்தும், பாண்டியனால் வெற்றிபெற இயலவில்லை; வரகுணன் தோற்றுவிட்டான். பிருதிவிபதி இறந்து விட்டான் இச்சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, ஆதித்தன், பகை அற்ற சோழத் தனிப் பேரரசை நிலைபெறச் செய்து விட்டான். - சாளுக்கியரோடும், ப்ாண்டியரோடும் போரிட்டுப் போரிட்டுப் பல்லவர்களும், பல்லவர்களோடும், இலங்கை