பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் - 109 அரசர்களோடும் போரிட்டுப் பாண்டியர்களும், வலுவிழந்து போனமையால், தங்கள் இருநாடுகளுக்கும் இடையில்; சோழப் பேரரசு கண்ட ஆதித்தனை அடக்க இயலாமல் போயிற்று. தமிழக வரலாற்றின் பொற்காலம் எனப் போற்றப்படும் சிறப்பினுக்கு உரிய சோழப் பேரரசு, இவ்வாறு ஆதித்தனால் தோற்றுவிக்கப் பட்டது. விழ்ச்சி முதலாம் ஆதித்தனால் தோற்றுவிக்கப்பட்டு பேரரசன் இராசராசனாலும், அவன் மகன் இராசேந்திரனாலும், 'கங்கா நதியும் கடாரமும் கைக்கொண்டு சிங்காதனத்திருந்த செம்பியர்கோன்' எனப் பாராட்டுமளவு புகமே ணியின் உச்சிக்கே கொண்டு ' செல்லப்பட்ட சோழப் பேரரசின் மறைவு. மூன்றாம் இராசேந்திரன் மறைந்த கி.பி. 1219ஆம் ஆண்டில் ஏற்பட்டு விட்டது. என்றாலும், சோழப் பேரரசின் உண்மையான மறைவு, சோழர் வழிவந்த அதிராசேந்திரன் மறைய, சாளுக்கியர் வழிவந்த'முதற்குலோத்துங்கன் ஆட்சிக்கு வந்த கி.பி.1070ஆம் ஆண்டிலேயே ஏற்பட்டு விட்டது என்று கொள்ளலாம். அதிராசேந்திரன் மகப்பேறின்றியே மாண்டுபோக, சோழர் அரியணையில் அமர அச்சோழர் குடியில் ஒருவரும் இலராகவே, கீழைச் சாளுக்கிய இராசராச நரேந்திரனுக்கும் சோழர் குலச்செல்வி அம்மங்கை தேவியர்க்கும் பிறந்த குலோத்துங்கன் சோழர் அரியணை அமர்ந்து சோழர்குல ஆட்சிக்கு முற்றுப்புள்ளி இட்டான் எனினும், தாய்வழி உரிமையால், சோழர் அரியனை அவனுக்கும் உரிமையு யுடையது ஆகவே, அவனும், அவன் வழியினரும் மேற் கொண்ட ஆட்சியும் சோழர்குல ஆட்சியே ஆம் : -