பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 காலந்தோறும் தமிழகம் பேரரசன் இராசராசன், இவன் மகன் இராசேந்திரன் ஆகியோர் ஆட்சிக்குப் பிறகு, சோழர் அரியணை ஏறிய வர்கள், அவர்களைப் போல அத்துணைப் பேராற்றல் படைத்தவர்கள் அல்லர்; ஆனால், அவர்கள் பொறுப் பேற்றுக் கொண்ட சோழப் பேரரசோ, குமரி முதல் துங்க பத்திரை வரை பரவிய பேரரசு: குருவித் தலையில் பனங்காய்; சிறுகோட்டில் பெரும்பழம் என்பார்களே: அது போன்ற நிலை: ஆனால் அரியணை ஏறியவர்களோ, தம் ஆற்றல் உணராதவர்கள். அதே நிலையில் பேரரசின் பொறுப்பாளிகள் என்பதால், தம் அண்டை அரசுகளின் உள் தாட்டு விவகாரங்களில் தலையிட்டுத் தம் பேரரசின் அழிவிற்குத் தாமே வித்திட்டவராயினர். ஒயாப் போர்கள் பாண்டியநாட்டில், தாயத்தினரான, பராக்கிரமி. பாண்டியனுக்கும், குலசேகர பாண்டியனுக்கும், அரசாளும் உரிமை பற்றிப் பகை வளர, குலசேகர பாண்டியன் தம் துணைவேண்ட, அவனுக்கும் அவன் வழியினர்க்கும் துணையாய் நின்று, பராக்கிரம பாண்டியனோடும் அவன் வழியினரோடும் சில காலம் போரிடவும், குலசேகரன் வழியினர், தாம் செய்த நன்றி மறந்துபோக, அதே நிலையில் பராக்கிரம பாண்டியனும், அவன் வழியினரும் தம் துணை வேண்ட, அவர்க்குத் துணையாய் நின்று, குலசேகர பாண்டியனோடும், அவன் வழியினரோடும் சில காலம் போரிடவும், தம் துளை வேண்டியவன் பகைவனுக்குத் துணைவத்தனர் என்பதால் சிங்களவரோடு பகைகொண்டு அவரோடு போராடவும், இரண்டாம் இராசாதிராசன் காலத்தில் தொடங்கி மூன்றாம், இராசேந்திரன் காலம் வரை ஓயாது போராடிப் போராடி, சோழர் பலம் இழந்து, போயினர். -