பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவித்தனார் 41 குறுநிலத்தலைவர்களின் தனிஆட்சி சோழப்பேரரசு கண்ட ஆதித்த சோழன் காலம் முதல். சோழப்பேரரசுக்கு அடங்கித் திறைசெலுத்தி வந்த குறு நிலத்தலைவர்கள் பலரும், காலம் செல்லச் செல்ல சோழப் பேரரசின் பலம் குன்றக்குன்ற, அவ்வாட்சிக்கு அடிபணிவது விடுத்துத் தனி அரசு செலுத்தத்தலைப்பட்டனர். இந்நிலை மூன்றாம் குலோத்துங்கன் காலத்திலேயே தொடக்விட்டது. கருவூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த சோரி கிளையினர், திறை செலுத்த மறுத்துக்கிளர்ந்து எழுந்ததும் குலோத்துங்கண் அவர்களை வென்று அழித்ததும், அது. போலவே, வடபுலத்தில், சோழ அரசுக்கு அடங்கிய சிற்றரசர் களாய் இருந்த தெலுங்குச் சோழர்கள், திறை தர மறுத்தி தோடு நில்லாமல், சோணாட்டுள் புகுந்து, சோனாட்டின் வடபுலத் தலைநகராக விளங்கிய காஞ்சிமா நகரையும் கைப் பற்றிய ஆளத்தொடங்கியதும், குலோத்துங்கன், அவர்கள்ை வென்று துரத்திக் காஞ்சியை மீட்டதும், அதுபோலவே வாரங்கல் பகுதியில் வாழ்ந்த காகதீய கணபதி என்பான், சோழர் ஆட்சிக்கு உரிமையுடையதான வேங்கியைக் கைக் கொண்டதோடு, சோணாட்டின் வடவெல்லையைத் தாக்கித் தொல்லை கொடுத்ததும், குலோத்துங்கன் அவனை வென்று ஒட்டியதும் ஆகிப் இந்நிகழ்ச்சிகள், சோழப் பேரரசின் அழிவிற்குக் காரணமாயவித்துரன்றும் நிகழ்ச் சிகளே ஆகும். + - இவ்வாறு எல்லைப்புற நாடுகளில் ஆண்டு கொண்டிருந்த சிற்றரசர்கள் பலரும் சோழநாட்டு ஆட்சிக்கு அடிபணிய மறுத்து எதிர்த்து எழுந்தது ஒரு புறமாக, சோழநாட்டிற்கு உள்ளாகவே, சோழர்படை முதலிகளாகவும், சோழர் ஆட்சிக்கு அடிபணிந்த குறுநிலத் தலைவர்களாகவும் இருந்து வந்தவர்களும் ஆட்சிக்கு அடிபணிய மறுத்து தனி அரசு அமைக்கும் முயற்சி மேற்கொள்ளும் நிகழ்ச்சிகளும் தலை எடுக்கலாயின. -