பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 11? உள்ளிட்ட நிலப்பரப்பு, மூன்றாம் இராசேந்திரன் காலத்தில் போசளர் உடைமை ஆகி விட்டது. மூன்றாம் இராசேந்திரன் சோழப் பேரரசு, மூன்றாம் இராசேந்திரன் காலத்தில், மேலும் நிலைகுலைந்து விட்டது: எல்லைப் புற வேந்தர் களும் பகைவர்களாகி விட்டனர்: உள்நாட்டுக் குறுநிலத் தலைவர்களும் அரசுக்கு எதிராகப் போர்க்கொடி ஏந்தி விட்டனர். துணைக்கு வந்த போசளரும் துரோகம் செய்யத் தலைப்பட்டு விட்டனர்; நிலைமை உண்ர்ந்த இராசேந்திரன் தம் முன்னோர் அரும்பாடுபட்டுக் கொண்ட காஞ்சி நாட்டைத், தெலுங்குச் சோழ கண்ட கோபாலனுக்கு அளித்து அவன் துணை நாடவேண்டியவனானான். சரிந்து விழும் சோழப் பேரரசைக் கண்ட கோபாலனாலும் காக்க இயலாமல் போய்விட்டது; இராசேந்திரன் வாணாள் இறுதி யில் சோனாட்டின் மீது படை எடுத்து வந்த, முதல் சடையவர்மன் சுந்தர பாண்டியன், சோழனுக்குப் பகைவ னாகவும், நண்பர்களாகவும் சோணாட்டில் இருந்த அனைவரையும் அழித்தான் போசளனும் கொல்லப்பட்டான் கண்ட கோபாலனும் கொல்லப்பட்டான். இராசேந்திரன், பாண்டியர்க்குத் நிறை செலுத்தும் சிற்றரசனாகச் சீரழிக்கப் பட்டான். பல நாட்டு மன்னர்களும் பணிந்து நின்று திறை செலுத்தப் பேரரசு நடத்திய சோழப் பேரரசு. இறுதியில் பாண்டியர்க்குத் திறை செலுத்தும் சிற்றரசாகிச்சீர்குலைந்து விட்டது. அவ்வாறு சீர்குலைந்த இராசேந்திரனுக்கு மகப் வேறும் இல்லாது போகவே, விஜயாலயன் அமைத்த சோழப் பேரரசு, முன்றாம் இராசேந்திரனோடு இல்லாமல் போய் விட்டது. * -