பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈ. சோழர்-பாண்டியர் உறவு செந்தமிழ் நாட்டின் சிறப்பிற்குக் காரணமாயிருந்தவர். அந்நாடாண்ட மூவேந்தர்களாம் சேர, சோழ, பாண்டியர் களே என்றாலும், அந்நாட்டின் சீரழிவிக்கும் அவர்களே காரணமாவர். ஒரு தாய் வயிற்று மக்கள், ஒரு மொழி பேசு வோர் எனக் கூறப்படினும், அவர்கள் ஒற்றுமையோடு உலகாண்டவர் அல்லர். மாறாக, ஒருவரோடொருவர் பகை கொண்டு ஓயாது போர் புரிந்தே வந்துள்ளனர். இந்நிலை சங்க காலத்திலேயே உருவெடுத்து விட்டது சோழர் குலச் சிறப்பிற்குக் காரணமாய் விளங்கிய கரிகாற் பெருவளத் தான் சேரரையும், பாண்டியரையும் வென்று அழித்தான். அந்நிகழ்ச்சியை, "இரும்பனப் போந்தைத் தோடும், கருஞ்சினை அரவாய் வேம்பின் அங்குழைத் தெரியலும் ஒங்கிரும் சென்னி மேம்பட மிலைந்த இருபெரு வேந்தரும் ஒரு களத்து அவிய.” என விளக்குவார் முடத்தாமக் கண் ணியார், அதுபோலவே, பாண்டியருள். தலைசிறந்தோனாகிய தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். சோரையும் சோழரையும் அழித்தான். அதை,