பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

̈ áfኽ ̇. கோவிந்தனார் - 115 "ஆவங்கானத்து அகன்தலை சிவப்ப சேரல் செம்பியன், சினங்கெழு திதியன் எழுவர் நல்வலம் அடங்க." எனப் பாராட்டுவார் நக்கீரனார். சோழர்- பாண்டியர்க்கிடையே நிலவிய இப்பகை உணர்ச்சி சங்க காலத்தோடு நின்று விடவில்லை. அது தொடர் நிகழ்ச்சியாகவே ஆகிவிட்டது. கி. பி. 880-ல் கும்பகோணத்திற்கு அணித்தாக உள்ள திருப்புறம்பியத்தில் நடைபெற்ற போர். பல்லவர்க்கும் பாண்டியர்க்கும் இன்டயே ஆன போரே ஆயினும், அதில் சோழன் பங்கு கொள்ளாது நின்றனல்லன். பல்லவ் அபராஜித வர்மனுக்கும் பாண்டியன் வரகுணனுக்கும் நடைபெற்ற போரில், சோழர் குலத்தவனான முதலாம் ஆதித்தன் பல்லவர்க்குத் துன்ன யாய்ப் பாண்டியனோடு போரிட்டு பாண்டியனைத் தோல்வி கண்டு தன் குலப் பகையைத் தீர்த்துக் கொண்டான். முதற் பராந்தகன் ஆதித்தனுக்குப் பிறகு சோழர் அரியணை ஏறிய முதற் பராந்தகன் ஆற்றிய முதல் அரசியல் பணி, மதுரை மீது படை எடுத்து வென்றதே ஆம். பாண்டிய மன்னனாக அப்போது விளங்கிய மூன்றாம் இராசசிம்மனை வென்று "மதுரை கொண்ட கோப்பரகேசர்' எனும் புகழ் சூட்டி" கொண்டான். அத்தோல்வியாலாம் பழியைத் துடைத்துக் கொள்வான் வேண்டி இலங்கை வேந்தன் ஐந்தாம் காசிபன் துணை கொண்டு வந்து தாக்கிய இராசசிம்மலை மீண்டும் தோற்கடித்து ஒடி ஒளிய இலங்கைக்கே துரத்தினான் பராந்தகன். தோல்வி கண்டும் துவண்டு விடாது, சோழன் கைப்பட்ட பாண்டி நாட்டை மீண்டும் அடையக் காலம் தோக்கிக் காத்