116
காலந்தோறும் தமிழகம்
திருந்தான் பாண்டியன் இராசசிம்மன் அந்லையில் பராந்தகன் வடக்கே வந்து தாக்கிய இராட்டிரகூடரோடு போரிட வேண்டி நேரவே அதுவே ஏற்புடைய காலமாக இழந்த தன் நாட்டை மீண்டும் தனதாக்கிக் கொண்டான்.
சுந்தர சோழன்
சோழர் ஆட்சிப் பொறுப்பு சுந்தர சோழன் என அழைக்கப்படும் இரண்டாம் பராந்தகன்பால் வந்துற்றதும். சோழர் பாண்டியர் போர் மீண்டும் தலை எடுத்துக் கொண்டது. அப்போது ஆட்சியில் இருந்த வீரபாண்டியனை வென்று பாண்டியர் தலைநகராம் மதுரையை மீண்டும் சோழர் உடைமை ஆக்கி “மதுராந்தக சுந்தர சோழன்” எனும் பெயர் சூட்டிக் கொண்டான். இராச்சிம்மனைப் போலவே வீர பாண்டியனும் இலங்கை அரசன் துணையை நாடினான். அக்காலை இலங்கை ஆண்டிருந்த நான்காம் மகிந்தன் படைத் துணை அளிக்கவே சோழனை எதிர்த்தான் இப் போரில் சோழர் படைக்குத் தலைமை தாங்கி வந்த சுந்தர சோழன் மகன் ஆதித்த கரிகாலன், வீர பாண்டியனைக் கொன்று “வீரபாண்டியன் தலை கொண்ட கோப்பர கேசரி” எனும் புகழ் கொண்டான்.
பேரரசன் இராசராசன்
முதல் இராசராசன் காலத்தில் சோணாட்டு அரசியல் தூதுவனைச் சிறையில் இட்டு இழிவுபடுத்திய சேர நாட்டான்மீது படையெடுத்துச் சென்ற சோழர் படையைத் தடுத்து நிறுத்திய பாண்டிய அமர புயங்கன், சோழர் பெரும் படையால் வென்று துரத்தப்பட்டான். இவ்வெற்றிக்கு அறிகுறியாக இராசராசன், “பாண்டிய குலாசனி” எனும் பட்டப் பெயர் பூண்டு பாண்டி நாட்டிற்கு ராசராச மண்டலம் எனும் பெயரைச் சூட்டினான்.