பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 காலத்தோறும் தமிழகம் வீரராசேந்திரனுக்குப் பிறகு, சோழர் அரியணையில் அமர்ந்த அவன் மகன் அதிராசேந்திரன், சில திங்களே அரசாண்டு நோய்வாய்ப்பட்டு இறந்து போகவே, சோணாட்டில் பெருங்குழப்பம் உண்டாயிற்று. பாண்டிய நாட்டில் இருந்து ஆளத்தக்க சோழரும் இலராயினர்: இழந்த தம் பாண்டிய அரசை எவ்வாறாயினும் மீண்டும் பெற்று ஆளவேண்டும் எனும் ஆர்வம் உந்த அதற்காம் காலத்தை எதிர் நோக்கியிகுந்த பாண்டியர்க்கு இது ஏற்புடைய காலம் ஆயிற்று: பாண்டியர் வழிவந்த ஐந்து அரசர்கள், பாண்டியநாட்டை ஐந்து பிரிவாகப் பிரித்துக்கொண்டு ஆளத் தொடங்கி விட்டனர். இந்நிலை கி. பி. 1081 வரை நிலவியது. முதற்குலோத்துங்கன் சோழ அரியணையில் முதற்குலோத்துங்கன் அமர்ந் தான். மேலைக் சளுக்கியரோடு போராடி வெற்றி காணும் வரை, பாண்டியநாட்டின் மீது கருத்துச் செலுத்த அவனாலும் முடியவில்லை; வடக்கே வெற்றி பெற்றதும், பாண்டியநாட்டின் மீது போர் தொடுத்தான். ஆண்டிருந்த பாண்டியர் ஐவரும், தோற்று ஒடிவிட்டனர். குலோத்துங்கன் வாகை சூடினான் என்றாலும், தம் முன்னோர்போல், பாண்டியநாட்டு ஆட்சிப்பொறுப்பினைச் சோழர் குலச் சிற்றரசன் ஒருவன்பால் ஒப்படைக்காது, ஆண்டுதோறும் தனக்குத் திரை தருமாறு பணித்து, பாண்டிய அரியணைக்கு .உரியவன்பால் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைத்துவிட்டான். இரண்டாம் இராசாதிராசன் முதற்குலோத்துங்கன் காலம் முதல், இரண்டாம் இராசா திராசன் ஆட்சித் தொடக்ககாலம் (கி. பி. 1163) வரை, சோழர் பாண்டியர் உறவு பற்றி எதுவும் தெரிந்திலது. இரண்டாம் இராசா திராசன் ஆட்சிக்காலத்தில் பாண்டிய நாட்டில், பராக்கிரம பாண்டியனுக்கும், குலசேகரப்