கா. கோவிந்தனார் - 119 பாண்டியலுக்கும் அரசாளும் உரிமை பற்றிப் பகைமை உண்டாயிற்று. பராக்கிரம பாண்டியன், இலங்கை வேந்தன் பராக்கிரபாகுவின் துணையை நாடின்ான். இலங்கைப் படைத்துணை வருவதற்குள், குலசேகர பாண்டியன், மதுரை யைக் கைக்கொண்டு, பராக்கிரமபாண்டியனையும் அவன் சுற்றத்தினரையும் கொன்றுளிட்டான். காலங்கடத்து வந்த இலங்கைப்படை, குலசேகரனைவென்று துரத்திவிட்டு, மலைநாட்டில் ஒளிந்துகொண்டிருந்த பர க் கிர ம பாண்டியன் மகன் வீரபாண்டியனைப் பாண்டியர் அரியனை யில் அமர்த்தியது. சில காலம் கழித்துக் குலசேகர பாண்டியன் பெரும்படை திரட்டி வந்து, இலங்கைப் படையைவென்று, வீரபாண்டியனைத் துரத்திவிட்டுத்தானே அரியணையில் அமர்த்தான். எனினும், புதுப்படை வரவால் பலம் பெற்ற இலங்கைப்படை குலசேகரனை வென்று துரத்திவிட்டு, வீரபாண்டியனைப் பண்டேபோல் அரச னாக்கிற்று. இலங்கைப் படையைத் தனித்து நின்று வெற்றிகோடல் இயலாது என்பதை உணர்ந்த குலசேகரன், இராசாதி ராசனின் துணையை நாடினான். சோழர்படை, பாண்டிய நாட்டுள் புகுந்து, சிங்களப் படைகளைவென்று ஒட்டிவிட்டு, அப்படைத்தலைவர் இருவர் தலைகளையும் கொய்துவத்து, மதுரைக்கோட்டை வாயிலில் வைத்தது. குலசேகரப் பாண்டியன் சோழர் துணையால் பாண்டிய நாட்டின் மன்ன னானான். பாண்டிய நாட்டில், சோழர் படையால், தன் படைக்கு நேர்ந்த தோல்வி கண்டு வருந்திய இலங்கை மன்னன் குலசேகரப் பாண்டியனையும், அவனுக்குத் துணை நிற்கும் சோழனையும் எவ்வாறாயினும் வெற்றிகொள்ள வேண்டும் எனத் துணிந்தான். அதற்கான படைப்பெருக்கத்திற்கு வழி வகுக்கலாயினான். அஃதறிந்தான் இராசாதிராசசோழன், ஈழநாட்டு அரசுரிமை காரணமாகப் பராக்கிரம பாகுவோடு.
பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/118
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
