பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 காலத்தோறும் தமிழகம் பகைகொண்டு, சோழர் துணை தாடி வந்திருக்கும். சீவல்லபன் தலைமை தாங்க, சோழர்படை இலங்கை புகுந்து இலங்கைப் படைகளை அழித்து, எண்ணிலாப் பெரும் பொருளைக் கொள்ளை கொண்டு தமிழகம் மீண்டது. இலங்கை வேந்தன் பராக்கிரமபாகுவின் சிந்தனை ஒட்டம் வேறு வகையில் திரும்பியது. ஈழநாட்டு அழிவிற்குத் தான் வீரபாண்டியனுக்குத் துணை போனதே காரணம் என உணர்ந்தான். உடனே அதை மறந்து, குலசேகரனைப் பாண்டியனோடு நட்புறவு கொண்டான். மணவுறவும் உண்டாயிற்று: குலசேகரப் பாண்டியன், சோழர் செய்த நன்மைகளையெல்லாம் மறந்தான். சோழர் படைத் தலைவர் களை நாட்டை விட்டு வெளியேற்றினான். குலசேகரப் பாண்டியனின் நன்றிகெட்ட செயல் கண்டு கொதித்து எழுந் தான் இராசாதிராச சோழன்; சோழர் படை பாண்டிய நாடு புகுந்தது. குலசேகரப் பாண்டியனைத் தலைநகரிலிருந்து துரத்திவிட்டு வீரபாண்டியனை அரியணையில் அமர்த்திப் புகழ் கொண்டது. - மூன்றாம் குலோத்துங்கன் இரண்டாம் இராசா திராசனுக்குப் பின், மூன்றாம். குலோத்துங்கன் சோழர் அரியணை ஏறியதும், குலசேகரப் பாண்டியன் மகன், விக்கிரமபாண்டியன், இலங்கைப்படை ஆற்றலினும், சோழர்படை ஆற்றலே பெரிதாம்: அச்சோழர் துணை இருந்தாலல்லது, பாண்டியர் அரியணை கிடைக்காது என்ற உண்மை உணர்ந்து குலோத்துங்கனிடம் அடைக்கலம் புகுந்தான்; அதே சமயம், சோழர்படைத் துணையால் பாண்டியநாட்டு ஆட்சி உரிமைபெற்ற வீரபாண்டியனும், சோழர் செய்த நன்றியை மறந்து, சோழர்களுக்குப் பகைவனாய், இலங்கையர்க்கு நண்பனாகிவிட்டான். அது பொறாத குலோத்துங்கன், பாண்டிய நாடு புகுந்து வீர