பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. மாநகர் மதுரை வடவேங்கடம் தென் குமரிக்கு இடைப்பட்ட தமிழகம், பண்டு பலப்பல பேருர்களைத் தன்னகத்தே கொண்டிருந்த தேனும், மூவேந்தர்களின் அரசியல் தலைமை நிலையங் களாய்த் திகழ்ந்த மாநகர்கள், மதுரை, உறையூர், வஞ்சி, புகார் என்ற நான்கேயாம். மதுரையைத் தலைநகராகக் கொண்ட பாண்டி நாட்டிற்குக் கொற்கை போலவும், வஞ்சியைத் தலைநகராகக் கொண்ட சேரநாட்டிற்குத் தொண்டிபோலவும், உறையூரைத் தலைநகராகக் கொண்ட சோழநாட்டிற்குக், கடல் வாணிகம் வளர்க்கும் துறைமுகப் பட்டினமாய் விளங்கிய புகார், சோழ அரசர்களுள் ஒரு சாராரின் தலைநகராகவும் விளங்கிற்று. ஆதலின், மூவேந் தர்ப் பேரூர்களாய், இந்நான்கு நகரங்களும் கொள்ளப் பட்டன. அதனாலேயே சிலப்பதிகாரம் பாடிய சேரர் கோவாகிய இளங்கோவடிகளார், தமிழகத்தின் பேரூர்களாக இந்நான்கு தகரங்களையும் குறித்துள்ளார்." - சேர, சோழ நாடுகளுக்கு இல்லாத ஒரு பெரிய பகை, பாண்டிநாட்டிற்கு இருந்தது. அந்நாடு பகையரசர்களால் பாழுறுவதோடு, அவ்வப்போது கடல்கோள்களாலும் அழிவுற்று வந்தது. காய்சின வழுதி முதல் கடுங்கோன் ஈறாக உள்ள எண்பத்தொன்பது அரசர்கள் ஆட்சிபுரிந்து வந்த காலம்வரை, பாண்டிநாட்டுத் தலைநகராக விளங்கிய தென் மதுரையும் பஃறுளி, குமரி எனும் இரு ஆறுகளுக்கு இடைப்பட்ட ஏழ்தெங்கநாடும், ஏழ்மதுரை நாடும், ஏழ்முன்