பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 121 பாண்டியன் படையையும், அவனுக்குத் துணை வந்த இலங்கையர் படையையும் அழித்து, பாண்டிய நாட்டு அரசுரிமையை விக்கிரம பாண்டியனுக்கு அளித்து மதுரை யில் வெற்றித்துரண் நாட்டி மீண்டான். தாடிழந்த வீரபாண்டியன், இலங்கைப் படையை நம்பிப் பயனில்லை; சேரன் படைத்துணை பெருந்துணையாம் என எண்ணினான் போலும்; மலை நாடு சென்று சேரனிடம் படைத் துணை வேண்டினான். அவன் அது அளிக்கவே, அப் படை கொண்டு மதுரையைத் தாக்கினான். வீரபாண்டி பனின் இம்முயற்சிகளை முன் கூட்டியே அறிந்திருந்த குலோத்துங்கன், பெரும் படையோடு வந்து சேர, பாண்டியர் இரு படைகளை எதிர்த்துப் போரிட்டு, இரு படைகளையும் ஒரு சேர அழித்தான். பாண்டியர்க்கு வழி வழி உரிமை உடையதான மணிமுடி குலோத்துங்கன் கையகப்பட்டது. வீர பாண்டியனின். அரசமாதேவியும் சிறை வைக்கப்பட்டாள். குலோத்துங்கனைப் புகைத்துக் கொண்டது பெரிய பிழையாகும் என்பதை உணர்ந்த மலை நாட்டு மன்னன், வீரபாண்டியனையும், அவன் இரு மக்களை யும் உடனழைத்துக் கொண்டு சோணாடு வந்து குலோத்துங் கனிடம் அடைக்கலம் புகுந்தான். பிழை பொறுக்கும் பேருள்ளம் வாய்ந்த குலோத்துங்கன், அவர் செய்தன எல்லாம் மறந்து, வீர பாண்டியனுக்குப், பாண்டி நாட்டின் ஒரு பகுதியை உரிமையாக்கினான். குலோத்துங்கன் உதவியால் அரசு பெற்ற விக்கிரம பாண்டியன் இறந்த பின்னர், ஆட்சிக்கு வந்த அவன் மகன் சடையவர்மன் குலசேகர பாண்டியன், சோழர் செய்த நன்றியை மறந்து, குலோத்துங்கனுக்கு எதிராக அடாத செயல்கள் புரியத் தொடங்கினான். அது கண்டு பொறாத குலோத்துங்கன், பாண்டிய நாட்டின் மீது பாய்ந்து, குலசேகரப் பாண்டியனைத் தோற்றோடச் செய்து விட்டு கா தமி-8