பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 காலந்தோறும் தமிழகம் அரண்மனையை அறவே அழித்து, ஆங்கேயே சோழ பாண்டியன் எனும் பட்டமும் சூட்டிக் கொண்டு வீரமா முடியும் சூடிக் கொண்டான். மூன்றாம் இராசராசன் பாண்டிய நாட்டு மன்னனாக 1216ல் மாறவர்மன் சுந்தர பாண்டியன் முடி சூட்டப் பெற்றான். அறிவு, ஆற்றல்களில் சிறந்த அவன், தன் பாண்டிய நாடு,பல்லாண்டு காலமாக, சோழர் தாக்குதலுக்கு ஆளாகி அழிந்ததை எண்ணி எண்ணித் துயர் உற்றான்; அதற்கு ஈடாகப் பழிக்குப் பழி வாங்கத் துடித்துக் கொண்டிருந்தான் : அதற்கு ஏற்ற காலமும் வாய்த்துவிட்டது. சோணாட்டில் மூன்றாம் குலோத்துங்கன் இறக்க, அவன் மகன், மூன்றாம் இராசராசன் முடிபுனை ந்தான்; சோழர் குல முன்னோர்கள் பால் அமைந்து கிடந்த ஆண்மையும் அறிவும் அறவே இல் வாதவன் இவன். அஃது அறிந்து கொண்டான் சுந்தர பாண்டியன். உடனே சோணாட்டுள் புகுந்து, இராச ராசனை வெற்றி கொண்டு, சோணாட்டு நாடு நகரங்களை அழித்தும், மாட மாளிகைகளை இடித்தும், பெரும் பாழ் செய்தான். х தஞ்சையும் உறத்தையும் தரை மட்டமாயின. தோற்ற இராசராசன் உரிமைச் சுற்றத்துடன் எங்கோ ஒடி ஒளிந்து கொண்டான். வெற்றி கொண்ட சுந்தர பாண்டியன், சோழர் தலைநகரங்களுள் ஒன்றான, முடிகொண்ட சோழ புரம் எனப்படும் பழையாறை நகரில் உள்ள அரண்மனை யில் வீராபிடேகம் செய்து கொண்டான்; பின்னர் பாண்டிய நாடு திரும்பும்போது, பொன்னமராவதியில் தங்கி இருந்து, தோற்றுத் தலைமறைவாகிவிட்ட இராசராசனை அழைத்து, அவனோடு சந்து செய்து கொண்டு சோணாட்டு ஆட்சி உரிமையை அவனுக்கே அளித்து விட்டான்.