பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 123 பாண்டியனுக்குத் திறை செலுத்திக் கொண்டு, அவனுக்கு அடங்கிய அரசனாய் ஆட்சி புரிவதை வெறுத் தான் இராசராசன், பாண்டியன் ஏவலைப் புறக்கணித்தான் அவனுக்குத் திறை தர மறுத்தான். அஃது அறிந்த சுந்தரப் பாண்டியன் சோழ நாட்டின் மேல் படை எடுத்துச் சென்று, இராசராசனை வென்று துரத்தினான், தோற்ற இராச ராசன் தன் நண்பனாகிய குந்தன நாட்டு அரசனிடம் படைத் துணை பெறுவான் வேண்டி வட நாடு நோக்கிச் செல்லும் வழியில் காடவர் குலத்தவனாகிய கோப்ப்ெருஞ் சிங்கன் என்பான், இராசராசனைக் கைப்பற்றிச் சேந்தமங்கலம் சிறையில் அடைத்துவிட்டான். அஃது அறிந்த போசள நாட்டு மன்னான வீர நரசிம்மன், படைபுட்ன் வந்து, கோப்பெருஞ்சிங்கனை வென்று, இர்ாசராசனைச் சிறை மீட்டு, உரிய சோணாட்டை அளித்து, ஆண்டு வருமாறு செய்தான். - மூன்றாம் இராசேந்திரன் மூன்றாம் இராசராசனுக்குப் பிறகு, அவன் மகன் மூன்றாம் இராசேந்திரன் ஆட்சிக்கு வந்தான். தன் தந்தை காலத்தில், பாண்டியர் இருமுறை படையெடுத்து வந்து சோழ நாட்டுக்கு, விளைவித்த கேடுகளை எண்ணி எண்ணிக் கலங்கிய இராசேந்திரன், அதற்குப் பாண்டிய நாட்டைப்பழி வாங்கத் துணிந்தான்: பாண்டியர் அரியணையில் அப் போது அமர்ந்த, மாறவர்மன் சுந்தர பாண்டியன், ஆற்றலும் வீரமும் படைத்தவன் அல்லன்; பாண்டியனின் இக்குறை பாட்டினை அறிந்து கொண்ட இராசேந்திரன், பாண்டிய நாட்டைப் படையால் அழித்து, மாறவர்மன் சுந்தர பாண்டியனை வென்று, அடிமை கொண்டு தனக்குத் திறை தரப் பணித்துவிட்டு, எண்ணிய எண்ணியாங்கு முடிக்கும் திண்ணியனாய்ப் புகழ் கொண்டான்.