பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 காலந்தோறும் தமிழகம் ஆனால், காலம் மாறிவிட்டது: இராசேந்திரன் ஆட்சி இறுதியில். பாண்டியர் அரியணையில் முதலாம் சடைய வாமன் சுந்தர பாண்டியன் அமர்ந்தான். பாண்டிய நாட்டின் புகழைப் பண்டே போல் உயர்த்தத் துடிக்கும் உள்ளம் வாய்க்கப் பெற்றவன். அதனால் மெல்ல மெல்ல தன் படைபலத்தைப் பெருக்கிக் கொண்டு, கி.பி. 1257, சோழ நாட்டின் மீது படையெடுத்துச் சென்று, இராசேந் திரனை வென்று, அவனைப் பாண்டியர்க்குத் திறை செலுத்தும் சிற்றரசனாக்கிச் சீர் கொண்டான். இவ்வாறு, கடைச் சங்ககாலத்தில் கரிகாலன் தொடங்கி வைத்த சோழர்-பாண்டியர் போர் - ஆயிரம் ஆண்டும். போராய்ப் பெருகி, கடைசியில், மூன்றாம் இராசேந்திரன் காலத்தில் சோழர் அழிவோடு முடிவுற்றது. -